News
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இம்மாதம் 14ம் திகதி இடம்பெறும்.
Feb 8, 2010
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இம்மாதம் 14ம் திகதி இடம்பெறும்.
கல்லூரி அதிபர் திரு சு.புண்ணியசீலன் தலைமையில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும் இந் நிகழ்விற்கு திரு மா.சிறிஸ்கந்தராஜாவும் (மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர்) சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதியதிபர் திரு வே.வில்லவராஜரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி உயர்பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற போதிலும் கல்லூரிக்கு சென்று வருவதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் விளையாட்டுப் போட்டிக்கு செல்ல பாதுகாப்பு தரப்பிடம் எவ்வித அனுமதியும் பெறவேண்டிய அவசியம் இல்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கின்றது.