News

யூனியன் கல்லூரி அபிவிருத்திக்கென ரூபா 20 மில்லியன் வழங்குவதாக பிரதி கல்வியமைச்சர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
Oct 30, 2009

பிரதி கல்வியமைச்சருக்கும் கல்லூரி அதிபருக்கும் இடையில் இம்மாதம் 28ம் திகதி இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே அமைச்சரால் மேற்கூறப்பட்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்திற்க்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரதி கல்வியமைச்சர் திரு ம.சச்சிதானந்தன் அவர்கள் யூனியன் கல்லூரி அதிபர் திரு சு.புண்ணியசீலனின் விசேட அழைப்பின்பேரில் இம்மாதம் 15ம் திகதி யூனியன் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார் இவரை கல்லூரி அதிபர் திரு சு.புண்ணியசீலன் பிரதியதிபர் திரு இ.சண்முகேஸ்வரன் உபஅதிபர் திரு வே.சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர்.

உயர் பாதுகாப்பு வலைய பிரதேசத்தில் அமைந்துள்ள யூனியன் கல்லூரி சமூகம் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்தால் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டது இவற்றை செவிமடுத்த பிரதி கல்வியமைச்சர் திரு ம.சச்சிதானந்தன் அவர்கள் மேற்கன்ட விடயங்கள் குறித்து கலந்துரையாட தனது அமைச்சுக்கு வருமாறு கல்லூரி அதிபருக்கு அழைப்பு விடுத்தார் இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் இடையிலான சந்திப்பு இம்மாதம் 28ம் திகதி கல்வியமைச்சில் இடம்பெற்றது.

மேற்கன்ட சந்திப்பின்போது பிரதி கல்வியமைச்சரிடம் கல்லூரி அதிபர் பின்வரும் மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து உடன் நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுதித்திக்கேட்டுக்கொண்டார்.

01)உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்து கல்லூரியை மீட்டல்
02)கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றல்
03)உடனடியாக செய்யவேண்டிய சில அபிவிருத்திகள்.

இவற்றுக்கு பதில் அளித்த பிரதி கல்வியமைச்சர் அவர்கள் யூனியன் கல்லூரி அபிவிருத்திக்கென ரூபா 20 மில்லியனை ஒதுக்குவதாகவும் மற்றும் உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்து கல்லூரியை மீட்க்கும் விடயத்தில் தான் நாட்டின் அதிபருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் இக்கல்லூரியை தேசிய பாடசாலையாக்குவதற்கும் தன்னாலான அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்;கொள்வதாகவும் கல்லூரி அதிபருக்கு உறுதிமொழி வழங்கினார்.

2006ம் ஆண்டுக்கு பின்னர் யாழ் யூனியன் கல்லூரிக்கு விஜயம் மேறக்கொண்ட ஒரு அரச உயர் அதிகாரி பிரதி கல்வியமைச்சர் திரு ம.சச்சிதானந்தன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.