News
அதிபர் அறிக்கை --- 2009
Oct 15, 2009
யா/யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை.
பரிசுத்தினம் 2008/2009
2009.10.15
இன்றைய விழாவில் பிரசன்னமாகி இருக்கும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பேராசிரியர் அவர்களே, கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களே, ஆசிநல்கும் செஞ்சொற் செல்வரே, சகோதர பாடசாலை அதிபர்களே, பழைய மாணவர்களே, பெற்றோர்களே, உங்கள் அனைவருக்கும் மதிய வந்தனங்கள் உரித்தாகுக.
காலம் வேகமாய்க் கரைகிறது; மாற்றங்கள் துரிதகதியில் நிகழ்கின்றன இத்தகைய கால ஓட்டத்தில் எமது கல்லூரியும் தன் செயற்பாட்டை முன்னெடுத்துச் சென்று, தன்னை உயர்த்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந் நிலமைக்கு எமக்கு என்றென்றும் அருட்கடாட்சங்களை அருளும் அன்னை புவனேஸ்வரிக்கு சிரந்தாழ்த்தி, வருங் காலங்களிலும் விக்கினங்கள் அணுகாவண்ணம் வினைத்திறன்கள் தொடரவும் வேண்டி இந் நன்னாளில் இவ்வாண்டிற்கான அதிபர் அறிக்கையினை சமர்ப்பிப்பதில் பேருவகை அடைகின்றேன்.
கல்விப்புலத்தின் பேரபிமானி; நும்மை அறியார் எம் மண்ணில் எவருமிலர். இன்றைய நாள் இனிதேயமைந்திட எம்மவர்க்காய் நும்பணி ஒதுக்கி வந்தமை கல்லூரிக்குப் பெருமையே.
கல்விப் பணிக்காய் யாழ் பல்கலைக்கழகந் தன்னில் சேவை தொடரும் பேரன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய பேராசிரியர் மாரிமுத்து சின்னத்தம்பி அகவை அறுபத்தொன்றினைக் கண்ட போதிலும் அறிவொளியும் மிடுக்கும் கொண்டு ஆசிரியர் தம் வாண்மை விருத்திக்கு உந்துதல் தரும் விந்தை மனிதர்.
கொழும்புப் பல்கலைக்கழகந் தன்னில் பொருளியல் துறையை சிறப்புப் பாடமாய் கற்றுத் தேர்ந்து இளங்கலைமாணியாய், இளங்கலைத் தத்துவமாணியாய், யாழ் பல்கலைக்கழகந் தன்னில் முதுமாணியாய், பட்டப்பின் கல்வி டிப்ளோமா தாரியாய், கல்வியியற் துறையில் முதுகலைத் தத்தவமாணியாய் விளங்கும் புலமையாளன்.
இத்துணை தகைமை கொண்ட தாங்கள் யாழ் மண்ணில் அசாதாரண சூழ்நிலை நிலவிய வேளை எம்மவர் இடர் களைய தம்மை அர்ப்பணித்த பெருமகன், ஆசிரியராய், ஆசிரிய ஆலோசகராய், வளவாளராய், பரீட்சகராய், மேலதிக தலைமைப் பரீட்சகராய், இணைப்பாளராய் (PGDE, MED) கலைத் திட்ட வடிவமைப்பாளராய், வருகை விரிவுரையாளராய், கல்வியியற்துறை விரிவுரையாளராய், சிரேஷ்ட விரிவுரையாளராய் பேராசிரியராய் உயர்ந்த பெருமகன்.
நீர் பெற்ற கல்வியும், பெற்ற தகைமைகளும், வகித்த பதவிகளும், செய்யும் சேவைகளும் எமது கல்விச் சமூகத்திற்குக் கிடைத்த பெரு வரப்பிரசாதம்.
யாழ் மண்ணில் அசாதாரண சூழ்நிலை நிலவிய வேளை சொந்த நலனைக் கருத்திற் கொண்டு புலம்பெயர்ந்தவர் மத்தியில் எம்மக்களது நலனுக்காய் மூன்று தசாப்தங்கள் அர்ப்பணிப்புடன் சேவை நல்கிய தியாகி. கிராமத்துப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு அவ்வாசிரியர்களுக்கு வலுவூட்டற் பயிற்சிகளை வழங்கி அவர்தம் வாண்மை விருத்திக்கு உதவியதுடன், பிராந்திய நாளேடுகளில் எமது மாவட்டக் கல்வி நிலைகளை, கல்விப்புலம் சார்ந்த அனைத்து விடயங்களையும் ஆய்வு செய்து தனது கருத்துக்களை ஆதாரங் களுடன் சமூகத்திற்கு இன்றுவரை கூறிவருபவர்.
இடைநிலைக் கல்வியில் ஆசிரியர், மாணவர்களுக்கு உதவும் பொருட்டு பொருளியல் நூல்களையும், கல்வியியல் நூல்களையும், கல்வி வழிகாட்டி நூல்களையும் பாடசாலைச் சஞ்சிகை களுக்காக நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி வெளியிடும் கல்வியாளன்.
இத்தகைய எழுத்துத் துறை நுமக்கு 2005, 2006 களில் விருதைத் தந்து சென்றது.
மாணவர் தம் அடிப்படைத் திறன் விருத்திக்கான கருத்தரங்குகளையும் அதற்கும் அப்பால், வங்கி, அரச திணைக்களத்தினரது வினைத் திறன் விருத்திக்கான வழிகாட்டற் கருத்தரங்கு களையும் வழங்கிய வல்லுநன்.
மேலும் யாழ் விஞ்ஞான சங்கத்தினதும், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினதும், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினதும் அங்கத்துவராய்த் திகழ்கின்றார்.
இன்று எம் கல்லூரிப் பரிசுத்தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க இருகரங் கூப்பி வரவேற்கின்றோம்.
எமது கோட்டக் கல்விப் பணிப்பாளர், தமது பாடசாலைகளது உயர்ச்சியில் அக்கறை கொண்டு, அவை தரும் வெற்றிகள் கண்டு பெருமிதம் அடையும் திரு.ச.கைலாசநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தமையை இட்டு கல்லூரி மகிழ்வடைகின்றது. இவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.
அத்துடன் எம் அழைப்பையேற்று, கல்லூரிக்குச் சமுகம் தந்துள்ள அனைத்து அன்புள்ளங்களையும் கல்லூரி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
வடக்கில் வசந்தம் வந்தாலும்...........
நம் கல்லூரி அந்நியப்பட்டு, மனித சஞ்சாரம் அற்றதொரு சூழலில் தன் பணிகளைத் தொடர்ந்து, வருடம் ஏழினைக் கடந்து விட்ட போதிலும் அகவை 193ல் தன் காற்றடங்களைப் பதித்துள்ள நிலையிலும், "வடக்கில் வசந்தம்" எனச் சிந்தனைகள் உதித்துள்ள வேளையிலும் எல்லோருக்கும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்ற துடிப்பான சனநாயக அமைப்பு உருவாக்கப்பட்ட போதும் இன்றுவரை கல்லூரியின் புறச் சூழல்களில் மாற்றங்கள் காணாதும், மேலும் பாதுகாப்புகள், கெடுபிடிகள் வலுப்பெற்று வரும் நிலையிலும் எதிர்கால நன்மைகள் கருதி நம்பி வருகின்ற இந்தப் பிள்ளைகளது பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை அனுப்புகின்ற பெற்றோர் தம் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்குடன் கல்லூரி தன் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
கல்லூரியின் இன்றைய உயர்ச்சிக்குத் தடைகள் பல கண்டும் துவளாது சளையாத மனதோடு செயலாற்றும் கல்லூரிக் குடும்பத்திற்கும், ஏனைய உதவும் இதயங்களிற்கும் நன்றி கூறும் அதேவேளை இவர் தம் இம் மனப்பாங்கு தொடர்ந்தும் கல்லூரிக்குக் கிடைத்திட அன்னை அருள் பாலிப்பாராக.
"வடக்கில் வசந்தம்" வெறும் வாய் வார்த்தைகளாகாது எம்கல்லூரிக்கும் வசந்தம் வீசிட ஆவன செய்ய வேண்டுமென வடக்கிற்கு வந்து செல்கின்ற அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். சிந்தனைகள் விரைந்து செயல்வடிவம் பெற்றிட வேண்டுமென ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
மாணவர் தம் உயர்ச்சியில் ...............
அறிவின் வளர்ச்சி வேகம் மிகத் துரிதமானது. நவீன உலகின் சவால்களைக் கருத்திற் கொண்டு காலத்திற்குத் தேவையான கருத்துக்களை வழங்குபவர்களாக, மாணவர் தம் உயர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்த வருகின்ற எமது கல்லூரி ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர் தம் தேவையறிந்து சேவையாற்றுகின்ற கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர் குழாமும் வருங் காலத்திலும் தம்மையும் உயர்த்தி கல்லூரியை மேலும் உயர்த்திட உதவி நிற்பார்கள். அதற்கும் இறைவன் ஆசி வழங்குவானாக.
கல்லூரி ஆசிரியர்கள் திருமதி.அ.கி.வலன்ரைன் அவர்கள் இலங்கைக் கல்வி நிர்வாக சேவையில் (SLEAS III) சித்தியெய்தி பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார். செல்வி.வ.வயித்திலிங்கம் அவர்கள் ITEC Scholarship at the English of Foreign Language பயிற்சிக்காக இந்தியா சென்றுள்ளார்,
திரு.நா.மனோரஞ்சிதன் ஆசிரியர் அவர்கள் கல்வியியலாளர் சேவைக்கு பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.
ஆசிரியர்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப தமது வாண்மையை விருத்தி செய்யவும், தம் சேவையில் திருப்தி கண்டிடவும், வாழ்வு வளம் பல பெற்றிடவும் இறைவன் துணை நிற்பாராக. இன்று வரை எமது கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்கள் 40 பேரும் தற்காலிக இணைப்பிலுள்ள ஆசிரியர்கள் 07 பேரும் சேவையாற்றி வருகின்றனர். இவர்தம் சேவை தொடர பிரார்த்திப்போம்.
சேவையாற்றிட வந்த இவர்கள் ...........
கல்லூரிச் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்க ஆசிரியர் கழகத்தில் தம்மையும் இணைத் திட்ட சிறிது காலம் மாற்றம் பெற்றுச் சென்று மீண்டும் வருகை தந்த திரு.செ.திருமாறன் (வணிகம்) நாடக ஆசிரியர் திரு.ந.தவசோதிநாதன், கணிதம் கற்பிக்க வந்திருந்த திரு.மு.இராகுலன், திரு. இ.இராஜகாந்தன் (உடற்கல்வி), திரு.க.பாலவிசாகன் (ஆங்கிலம்), செல்வி. மா.அப்புத்துரை (ஆங்கிலம்), பழைய மாணவரும் அரசியல், தமிழ் கற்பிக்கும் திரு.வே.சேந்தன், செல்விவி.ம.சதாசிவம் (ICT) மீண்டும் இணைந்த திட்டமிடல் நிதி உதவியாளர் திருமதி.செ.ரவிராஜன் ஆகியோரை வரவேற்கும் அதேவேளை, கல்லூரியின் உயர்ச்சிக்கு ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் எனவும் வேண்டி நிற்கிறோம்.
கல்லூரி வளர்ச்சியில் இவர்களும்.......
கல்லூரியின் அன்றாடச் செயற்பாடுகளில் துணைநின்று அதன் வளர்ச்சி கண்டு உழைத்திடும் அலுவலக உத்தியோகத்தர்கள், ஆய்வுகூட உதவுநர், தோட்டப் பராமரிப்பாளர், காவலாளி ஆகியோரும் தத்தமது சேவையில் உயர்ச்சி பெற்றிடவும் வாழ்வு செழிப்புடன் திகழ்ந்திருக்கவும் ஆண்டவன் அருள் பாலித்திடுவானாக.
வேற்றிடம் சென்ற இவர்கள்............
பதவியுயர்வு பெற்று தன் சேவை தொடர்ந்திட சென்ற திரு.நா.மனோரஞ்சிதன்; (வவுனியா தேசிய கல்வியிற் கல்லூரி) திருமதி.அ.கி.வலன்ரைன் (இ.க.நி.சேவை III) இடமாற்றம் பெற்றுச் சென்ற திரு.மு.இராகுலன் (தென்மராட்சி), திருமதி.நி.ரமேஸ் (யா/ மயிலணி சைவ ம.வி), திருமண பந்தத்தில் இணைந்து அவுஸ்திரேலியா சென்ற திருமதி.பி.சரதன், செல்வி.த.பொன்னம்பலம் ஆகியோரது வளமான வாழ்விற்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
மாறிவரும் உலகினுள் இவர்கள்........
எமது கல்லூரி அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கின்ற போதும் சிறந்ததொரு எதிர்காலம் தமக்கு அமைய வேண்டும் என்ற நம்பிக்கையோடு வரும் ஒவ்வொரு மாணவரதும் விருப்பை, இலக்கை, இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு கல்லூரியிடம் உள்ளது. அதேவேளை பெற்றோர் தம் நம்பிக்கைகள் வீண்போகா வண்ணம் இயங்கும் தேவையுமுள்ளது. அதற்கமைய நம் கல்லூரியானது, எதிர்காலத்தில் தான் வாழும் உலகில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வாழ்வதற்கு வழிகாட்டி வருகின்றது.
பலவீனமான பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தப் பிள்ளைகள் கல்வி வாய்ப்புக்களைப் பெற்று கற்றலிலும், ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவருவது பாராட்டுதற்குரியது.
வலிகாமம் பிரதேசத்திலிருந்து புலமைப் பரிசில் பெற்ற மாணவர்களும் வளம் கூடிய பெற்றோர்களின் பிள்ளைகளும் நகர்ப்புறப் பாடசாலைக்குச் செல்ல வசதியற்ற வறிய இடப் பெயர்வுக்குள்ளான மாணவர்கள் தமது அடுத்த தேடலாக எமது கல்லூரியை நோக்கி வருகிறார்கள். இவர்களுடைய கல்விப் பெறுபேற்றை உயர்த்துவதிலும் மற்றும் சகல துறைகளிலும் யூனியன் கல்லூரி சாதனை படைத்து வருகிறது. வருடாவருடம்; கல்விசார் செயற்பாடுகாளை தினக்குரல் பத்திரிகை மாவட்ட ரீதியாக பகுப்பாய்வு செய்து சமூகத்திற்கு முன்வைக்கிறது. இந்த ரீதியில் க.பொ.த. (சா/த) பரீட்சையின் சித்தி வீதத்தில் தேசிய பாடசாலைகளுடனும், நகர்ப்புறப் பாடசாலைகளுடனும் எமது கல்லூரிப் பெறுபேறுகள் போட்டியிடுமளவுக்கு உள்ளது. அதேவேளை க.பொ.த (உ/த) பரீட்சையில் துறை ரீதியான சித்திவீதம் நகர்ப்புறப் பாடசாலைகளை விஞ்சி நிற்பது எமது கல்லூரிக்குப் பெருமையே.
கடந்த ஒரு தசாப்தமாக வலிகாமம் வலயத்தில் க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேற்றில் முன்னணியில் நிற்பதுடன், இம்முறையும் வலயத்தில் தனது முதலாமிடத்தை எமது கல்லூரி தக்கவைத்துள்ளது.
2007 க.பொ.த (உ/த) உயிரியல் துறை 66.7 சதவீதத்தையும், கணிதத்துறை 81.8 பாரம்பரியத்தை, சீர்மியத்தைக் கட்டிக் காத்து அதிபர், ஆசிரியர்களுக்கு அடுத்துப் பெருமை தேடி வருகின்றனர் மாணவ தலைவர்கள். சிரேஷ்ட மாணவதலைவன் செல்வன்.வி.கோகுலன், தலைவியாக செல்வி.க.கபீர்த்தனா ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.
இவர்கள் தத்தமக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளை நிர்வாகத்தினரது வழிகாட்டலுடன் சிறப்புற ஆற்றி வருவது பாராட்டத்தக்கது. மேலும் இம்முறை ஆசிரியர்தின விழாவைச் சிறப்புற நடாத்தினர்.
அறிவோடு பண்புசார் விருத்தியைப் பெற்றுக்கொடுக்கும் பிறதுறைகள்.............
சமூகத்தின் அறிவு வளர்ச்சியையும், அதன் விழுமியச் செயற்பாடுகளையும் கருத்திற் கொண்டே கலைத்திட்டச் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பாடத்துறை ஊடாக மட்டுமன்றி இணைப்பாடவிதானச் செயற் பாடுகளின் ஊடாகவும் புறவேலைகள் மூலமாகவும் கல்வி பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் எமது கல்லூரியின் அமைவிடம் சாதகமாக அமையாதபோதிலும் தம்மாலான செயற்பாடுகளை வழங்கி, மாணவரது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெற வைக்கும் கல்லூரி ஆசிரியர் தம் பொறுப்புணர்வு, கடமையுணர்வு பாராட்டுதற்குரியது.
மாணவர் தம் எதிர்கால வாழ்;கைக்கு உயர்கல்வி வாய்ப்புகளுக்கு இத்தகைய புறக் கிருத்தியச் செயற்பாடுகள் என்றும் துணைபுரியும். அதனால் பெற்றோரும் மாணவர்களும் தனித்து பரீட்சைக்காக மட்டும் கற்காது போட்டி நிறைந்த கல்வயுலகில் மேம்பாடடைய இத்தகைய செயற் பாடுகளில் பங்குகொண்டு திறமைகளை வெளிக் காட்டி வெற்றிகளைத் தட்டிச்சென்று பெருமைகள் சேர்த்திட வேண்டும்.
மாணவர்கள் விருப்பத்துடன் செயலாற்றும் விளையாட்டுத்துறை............
பாடசாலை இணைக்கலைத்திட்டத்தில் முக்க்கியத்துவம் வாய்ந்ததாய் மாணவர் விரும்பிப் பங்கேற்கும் விளையாட்டு துறை புரிந்துவரும் சாதனைகள் இங்கு குறிப்பிடத்தக்கது. மாணவர் தம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை மீளவலியுறுத்த இத்துறை உதவி நிற்கிறது.
2008ற்கான மெய்வன்மைப் போட்டிகளில் கோட்ட மட்டத்தில் 22 முதலாம் இடங்களும், 21 இரண்டாம் இடங்களும், 23 மூன்றாம் இடங்களும் வலயமட்டத்தில் 10 முதலாம் இடங்களும், 08 இரண்டாம் இடங்களும், 05 மூன்றாம் இடங்களும், மாவட்ட மட்டத்தில் 09 முதலாம் இடங்களும், 04 இரண்டாம் இடங்களும், 03 மூன்றாம் இடங் களும் மாகாண மட்டத்தில் 06 முதலாம் இடங் களும், 02 இரண்டாம் இடங்களும், கிடைக்கப்பெற்ற அதேவேளை இவ்வாண்டில் கோட்டமட்டத்தில்; 13 முதலாமிடங்களும், 11 இரண்டாமிடங்களும், 03 மூன்றாமிடங்களும், வலய மட்டத்தில் 10 முதலாம் இடங்களும், 06 இரண்டாம் இடங்களும், 05 மூன்னறாம் இடங்களும், மாவட்ட மட்டத்தில் 03 முதலாம் இடங்களும், 07 இரண்டாம் இடங்களும், 02 மூன்றாம் இடங்களும், மகாண மட்டத்தில் 03 முதலாம் இடங்களும், 03 இரண்டாம் இடங்களும், 04 மூன்றாம் இடங்களும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வணியின் வீரர்கள், தேசியப் போட்டியில் கலந்து கொண்டனர்.
2009ல் வலயமட்டத்தில நடாத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் 15 வயது ஆண், பெண் அணிகள் வலயமட்டத்தில்; இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டன.
இவ்வாண்டில் நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்டத்தில் 19 வயது ஆண்கள் அணி கோட்ட மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
யாழ்மாவட்ட அணிக்கு (U 19) மாணவரைத் தெரிவு செய்ய எமது கல்லூரி மாணவர்களான தெ.டினேஸ், ந.துஸ்யந்தன், க.சுயாந்தன் ஆகியோர் பயிற்சிப் பாசறையில் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டில் எம் வலைப்பந்து அணிகள் தம் தொடர் பயிற்சியால், முயற்சியால், ஒன்றுபட்ட உழைப்பால் ஒருபடி மேற்சென்று கோட்ட மட்டத்தில் மட்டுமன்றி வலயம், மாகாணம் என அனைத்து மட்டங்களிலும் 15, 17, 19 வயதணியினர் முதலாம் இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்தமை கல்லூரிக்கு பெருமையே. யாழ் மாவட்டத்தில் தொடர்ந்து பன்னிரு வருடங்கள் மாகாண, தேசியப் போட்டிகளில் பங்குகொள்ளும் அணியாக எமது வலைப்பந்து அணி விளங்குகிறது.
கல்லூரியின் புகழை கடல்கடந்த நாடுகளிலும் பரப்பிய பெருமையும் இவ்வணிக்கே உள்ளது. 2008ல் இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையுடன் மலேசியாப் பல்கலைக் கழகம் நடாத்திய 18 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாக சர்வதேச அரங்கில் பிரவேசித்த பெருமைக்கும் ஆளாகிறது. இவ்வாண்டும் இவ்வாய்ப்பு எமது கல்லூரிக்கு கிடைக்கப் பெற்ற போதும் உலகை உலுக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் காரணமாக நழுவிப் போனது.
இவ்வாண்டு மன்னாரில் களமாடி வெற்றிக் கேடயத்தை தமதாக்கித் திரும்பிய இவ்வணி விராங்கனைகளை கல்லூரி, தெல்லிப்பழை றோட்டரிக் கழகத்தினருடன் இணைந்து வரவேற்பும், உபசரிப்பும் நடாத்தி அவர்களைக் கௌரவித்தது.
2009இல் பூப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் அணி வலய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும்; பெற்றுக் கொண்டன.
கல்லூரி முதன் முதலில் களம் இறங்கிய கரம் அணி வீரர்கள் (U 19 B) வலய மட்டத்தில்; மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
மூன்று தசாப்த கால இடைவெளிகளின் பின் மீண்டும் தொடங்கப்பெற்ற ஹொக்கி (U 19 B) அணி தனது திறமை, கூட்டுழைப்பு, முயற்சி என்பவற்றை வெளிப்படுத்தி வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும், மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தையும்; பெற்றுக் கொண்ட அதேவேளை தேசிய மட்டப் போட்டியிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்லூரியின் பெருமைக்குப் பெரிதும் உழைத்து வரும் விளையாட்டுத்துறை தேசிய மட்டத்திற்கு அப்பாற் சென்று சர்வதேச களத்திலும் தன் காற்றடங்களைப் பதித்து வருவது பாராட்டப்பட வேண்டியது. விளையாட்டுத் துறையில் அங்கம் வகித்து அணிகளை அலங்கரித்துள்ள வீரர்களுக்கும், அவர்தம் வெற்றிகளுக்கும், நன்றிகளும், பாராட்டுகளும் உரித்தாகுக. இத்தகைய வெற்றிகளுக்குப் பின்புலமாக இருந்து தொழிற் படுகின்ற விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர் களும், பயிற்றுநர்களுமான திருமதி.ஜெ.ஜெயதரன், திரு.இ.இராஜராஜன், திரு.செ.திருமாறன், திரு.இ.இராஜகாந்தன், திரு.சி.ஸ்ரீதரன், செல்வி.பி.பத்மநாதன் ஆகியோருக்கு நன்றிகள் பற்பல.
எதிர்கால நன்மைக்குக் களம் சமைக்கும் மன்றங்கள்............
அறிவோடு மாணவர் தம் பண்புசார் விருத்தியையும்; கவனத்தில் கொண்டு சிந்தனை, கற்பனை, ஆற்றல்களுக்கு செயற்றிறன் மேம்பாட்டிற்கு தலைமை தாங்கும் பண்பு, பொறுப்புக்களை ஏற்றல், கீழ்ப்படிவு, அன்பு, பரிவு, கருணை போன்ற இன்னும் பல மனித வாழ்விற்குத் தேவையான விழுமியங்களை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கென பாடசாலைகளில் மன்றங்களின் செயற்பாடுகள் அமைந்து காணப்படுகின்றன.
எதிர்கால நன்மையின் பொருட்டு விழுமியச் செயற்பாடுகளை வழங்குவனவாக வாழ்வில் உன்னதமான செயற்பாடுகளைக் கற்றுக் கொள்ளும் களமாக உயர் பண்பாடுகளைப் போற்ற வேண்டும் என்ற சிந்தனை விளை நிலங்களாக இவை அமைகின்றன.
இதற்கமைய கல்லூரியின் மன்றச் செயற்பாடுகள் மூலம் மாணவர் தம் எதிர்கால நீரோட்டத்தினுள் தம்மையிணைத்துக் கொள்ள வழிகாட்டி நிற்கின்றன@ வெற்றிகள் பெற உழைத்து நிற்கின்றன.
கல்லூரியின் உயர்தர மாணவர் மன்று மாணவர்களிடத்திலுள்ள அறிவு, திறன், மனப்பாங்கு, பயிற்சி, ஆளிடைத் தொடர்புகளுக்கு வழிசமைக்கும் வகையில் நிகழ்வுகளை நடாத்தி வருகிறது. கடந்த காலத்து அசாதாரண சூழ்நிலை காரணமாக வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற முடியாது போனது.
மன்றத் தலைவர் செ.சீராளன், செயலாளர் க.கிருசாந்தன், பொருளாளர் க.கயந்தன் ஆகியோரும், வழிப்படுத்துபவர்களாக ஆசிரியர்கள் திரு.அ.தயாபரன், செல்வி.ஜெ.செந்திவேல் ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர்.
பண்பாட்டை, பகுத்துணர்வை, ஒழுக்க சீலங்களை வளர்க்கும் இந்துமாமன்றம் தனது நாளாந்த, விசேட செயற்பாடுகளை ஆற்றிவருகிறது.
அருள்பாலிக்கும் அன்னைக்கு நாளாந்தம் பூசை களும், விசேட தினங்களில் அபிடேக ஆராதனை களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. மேலும் மாவைக்கந்தன், நகுலேஸ்வரர் ஆலய திருவிழா உபயங்களையும் செய்தும் வருகிறது. இதனை தலைவர் பே.பிரசாந்தன், செயலாளர் ச.பிருந்திரன், பொருளாளர் ம.துவாரகன், ஆகியோருடன் பொறுப்பாசிரியர்களாக செல்வி.பு.இளையதம்பி, திருவாளர்கள் ஏ.அனுசாந்தன், ந.தவசோதிநாதன் ஆகியோரும் செயற்படுத்தி வருகின்றனர்.
இணுவில் கந்தசுவாமி இளந்தொண்டர் சபையினரால் நடாத்த்பப்ட்ட சைவசமய அறிவுப் போட்டியில் செல்வன்.க.பிரகாசன் (தரம் 7) செல்வி.இ.துர்க்காஜினி (தரம் 10) ஆகியோர் 3ம் இடத்தைப் பெற்றதுடன், செல்வன்கள் பொ.தீபன் (தரம்7) க.றதீபன் (தரம் 7), சி.விஜயகுமார் (தரம் 7), சொ.தருமதன் (தரம் 11) ஆகியோர் ஆறுதற் பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர். இம் மாணவர்களுக்கும் நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திருமதிகள்.சா.கணேசமூர்த்தி, உ.பகீதரன், ஜெ.சுரேந்திரநாத் ஆகியோருக்கு நன்றிகள்.
கிறிஸ்தவ மாணவர்களால் நடாத்தப்படும் கிறிஸ்தவ மன்றம் வருடாந்தம் ஒளி விழாக்களை, காலைப் பிரார்த்தனைகளை, நற்சிந்தனைகளை நடாத்தி வருகிறது. மன்றின் தலைவர் இ.ஜோன்சன் பிரகாஸ், செயலாளர் செல்வி.அ.மேரிதிரேசா, பொருளாளர் பு.பிரகாஸ் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
திருமதி.ஜெ.தவேந்திரராஜா பொறுப்பாசிரியராக இருந்த வழிநடாத்தி வருகிறார்.
தேமதுரத் தமிழ் பரப்பும் தமிழ் மன்றம் செல்வன் தி;. மோகன்ராஜ், செல்வி. ச.ஜெனனிதா, வ.கஜீபா ஆகியோரை முறையே தலைவர், செயலாளர், பொருளாளராகக் கொண்டும் பொறுப்பாசிரியர்களாக திரு.ந.தவசோதிநாதன், திரு.ஏ.அனுசாந்தன் ஆகியோரைக் கொண்டும் செயலாற்றி வருகிறது.
2008ல் நடைபெற்ற தமிழ்மொழித் தினப் போட்டிகளில் கோட்டத்தில் 11 முதலாம் இடங்களும,; 08 இரண்டாம் இடங்களும், 01 மூன்றாம் இடமும்;, வலயமட்டத்தில் 07 முதலாம் இடங்களும், 02 இரண்டாம் இடங்களும், 01 மூன்றாம் இடமும், மாவட்டத்தில் 03 முதலாம் இடங்களும், 01 இரண்டாமிடமும், 02 மூன்றாம் இடங்களும், மாகாணத்தில் தலா ஒவ்வொரு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களும் கிடைக்கப்பெற்றன. செல்வன் சு.தசாங்கன் (பாவோதல் பிரிவு 4) 2008ல் நடாத்தப்பட்ட தேசிய மட்டப் போட்டியில் தங்கம் சூடினார். இம் மாணவருக்கும், ஏனைய மாணவர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
2009ல் நடாத்தப்பட்ட போட்டிகளில் கோட்ட மட்டத்தில் 15 முதலிடங்களும்,; 03 இரண்டாமிடங்களும், 04 மூன்றாமிடங்களும், வலய மட்டத்தில் 09 முதலாம் இடங்களும், 02 இரண்டாம் இடங்களும், 01 மூன்றாமிடமும், மாவட்டத்தில் 04 முதலாம் இடங்களும், 02 இரண்டாமிடங்களும், 02 மூன்றாமிடங்களும் மாகாணத்தில் 04 முதலாமிடங்களும் கிடைக்கப்பெற்றன. இது மாகாண மட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதியுயர் விருதாகும்.
2009 மாகாண மட்டத்தில் திறந்த போட்டிகளான வில்லுப்பாட்டு, குழு இசை ஆகியவற்றில் முதலாமிடங்களையும், எழுத்தாக்கப் போட்டிகளில் சிறுகதையில் லோ.அர்ஷிகா, திறனாய்வுப் போட்டியில் சௌ.பிரதர்சனா முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் பங்குபற்ற உள்ளனர்.
வெற்றிகளைத் தமதாக்கிய இம் மாணவர்களுக்கும் அவர் தம் திறன் வெளிப் பாட்டிற்கு அயராதுழைத்து நிற்கும் ஆசிரியர்கள் திரு.ந.தவசோதிநாதன், திரு.வே.சேந்தன், செல்வி.மு.ஜெயகௌரி, திரு.ஏ.அனுசாந்தன், செல்வி.ப.துரைசிங்கம் ஆகியோருக்கும் கல்லூரி தனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறது.
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மாகாண மட்டத்தில் செல்வி. க.சிவகௌரிநாயகி தெரிவு செய்யப்பட்டார. நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தியாகி அறக்கொடையினரால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் செல்வன் ம.அனுசாந் (7A) மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டார். அவர்களை வழிப்படு;த்திய ஆசிரியர்கள் செல்வி. பு.இளையதம்பி, திருமதிகள். உ.பகீதரன், ஜெ.தவலிங்கம் ஆகியோருக்கம் நன்றிகள் பற்பல.
தலைவர்.ஜெ.சந்துருகேசன், செயலாளர் கி.கஜந்தினி, பொருளாளர் நி.சுஜனா ஆகியோரைக் கொண்டு செயலாற்றும் ஆங்கிலமன்றம் 2008ல் நடாத்தப்பட்ட போட்டிகளில் கோட்த்தில் 1ம், 2ம்,
3ம் இடங்களை முறையே 11,15,16 மாணவர் களும் வலயத்தில் 1ம்,2ம் இடங்களைத் தலா ஒவ்வொருவரும், 5 மூன்றாமிடங்களையும் மாகாண மட்டததில் செல்வி.சி.சிந்துஜா (தரம் 7) Copy writing நிகழ்வில் 2ம் இடத்தையும் தமதாக்கினார்.
இவ்வாண்டிற்கான போட்டிகளில் கோட்டத்தில் 15 முதலாம் இடங்களும், 10 இரண்டாமிடங்களும், 10 மூன்றாமிடங்களும், வலயத்தில் 01 முதலாமிடமும், 02 இரண்டாம் இடங்களும் கிடைக்கப்பெற்றன.
இம்மாணவர் தம் வெற்றிகளுக்குப் பயிற்சி அளித்த பொறுப்பாசிரியர்கள் செல்வி வ.வயித்திலிங்கம், திரு.ம.சிவானந்தன், திரு.க.பாலவிசாகன், திருமதி.கி.ஜெயமனோன், செல்வி.மா.அப்புத்துரை ஆகியோருக்குப் பாராட்டுக்கள் உரித்தாகுக.
மாறிவரும் அறிவியல் உலகில் வாழ்வதற்கான தகைமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு களம் சமைக்கும் கணித விஞ்ஞான மன்றம் 2008ல் நடாத்தப்பட்ட கணித விஞ்ஞான அறிவுப் போட்டியில் உப மாகாண மட்டத்தில் செல்வன் ம.கோகுலசாயி (தரம் 8) செல்வி.த.தர்சனா (தரம் 10) ஆகியோர் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாண்டில் நடைபெற்ற போட்டிகளில் கோட்டத்தில் 01 முதலாமிடமும், 02 இரண்டாமிடங்களும், 02 மூன்றாமிடங்களைக் கணிதப் போட்டியிலும், விஞ்ஞானப் போட்டியில் 01 முதலாமிடமும், 02 இரண்டாமிடமும், 01 மூன்றாமிடமும் கிடைக்கப்பெற்றன.
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட தகவல் தொழிநுட்பப் பரிட்சையில் எமது மாணவர்கள் செல்வி.க.கபீர்த்தனா, செல்வன். ஜெ.கோபிபிரசாத், செல்விஇ.தர்சிகா, செல்வன் வ.பிறைசன் ஆகியோர் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இம் மாணவர்களுக்கும், அவர்களது உயர்ச்சிக்கும் உதவிய ஆசிரியர்கள் செல்வி ஆ.சர்வாஜினி. திருமதிகள் ஜெ.தவலிங்கம், ந.கமலநாதன், ம.ரவீந்திரன் திரு.பா.தர்மசீலன், திரு.சி.சிறிதரன், திரு.ம.ய+.கலிஸ்ரஸ் ஆகியோருக்கு நன்றிகள் பல.
கலைத்திறன் போட்டிகளில் தேசியம் வரை மாணவர்களைப் பங்கு கொள்ள உழைத்த வருகின்ற கவின்கலைமன்று 2008ல் நடைபெற்ற போட்டிகளில் செல்வன்.அ.சண்முகப்பிரியன் மாகாண மட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், வில்லிசை வெண்கலப் பதக்கத்தையும, 2007ல் தனி இசையிலும், 2008ல் பாவோதலிலும் சு.தசாங்கன் தங்கப் பதக்கத்தையும் சூடிக் கொண்டார். அதேவேளை 2009ல் சகலாகலாவல்லி மாலை விருத்தப்பா ஓதல் போட்டியில் கோட்ட மடட்த்தில் முதலாம் இடமும், வலய மட்டததில் இரண்டாமிடமும் கிடைக்கப் பெற்றது.
2009 மாகாண மட்டத்தில் குழுஇசை (பிரிவு 1), வில்லிசை என்பன முதலிடத்தைப் பெற்றுக் கொண்டன.
இவர்களது உயர்ச்சிக்கு உதவிய செல்வி.ஜெ.முருகையா, திரு.ஏ.அனுசாந்தன், திரு.ந.தவசோதிநாதன் ஆகியோருக்கு நன்றிகள் பற்பல.
சித்திர பாடத்துக்கான கண்காட்சி, ஓவியநதி, 10.06.2009 சித்திர கூட அறையில் ஆசிரியரதும், மாணவரதும் ஒன்றுபட்ட செயற் பாட்டில் அவர்தம் திறன்களை வெளிப்படுத்தும் கைவண்ணங்கள் காட்சியில் இடம்பெற்றன. ஆசிரியர் திருமதி.லெ.சோ.லொயிட் அவர்களுக்கும் திற்னகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
மன்றின் தலைவராக செல்வி.அ.ஆகன்யா. செயலாளர் இ.ஜதீபா, பொருளாளர் க.தர்மீகன் ஆகியோர், திருமதி ம.பிறேம்குமார் அவர்களது வழிகாட்டலில் செயற்பட்டு வருகின்றனர்.
மாணவர் தம் தொழிநுட்ப திறன்களுக்கும், தகவல் தொடர்பாடல் திறன் வளர்ச்சிக்கு கணிணிக் கல்வியின் பெருக்கத்திற்கும், தம்மாலான முயற்சிகளைச் செய்து வருகிறது தொழிநுட்ப மன்று.
2009ல் மனைப்பொருளியல் அறிவுப் போட்டியில் கோட்ட மட்டத்தில் ஒரு முதலாமிடமும், இரு இரண்டாமிடங்களும், ஒரு மூன்றாமிடமும் கிடைக்கப்பெற்றது. இவற்றுள் ‘கலைச்சுடர்’ ‘இளந்தென்றல்’ சஞ்சிகைகள் 2ம் இடத்தைப் பெற்றுக் கொண்டன. புத்தாக்கப் போட்டியில் ‘உலர்த்தி’ (செல்வி.செ.கீர்த்தனா 2011 கலைப் பிரிவு) ‘மரக்கறி சீவும் இயந்திரம்’ ‘தேங்காய்ப் பிள்ளையார்’ (செல்வி.வி.பிரயங்கா 2011 கலை) போன்றவை தெரிவாகின.
மென்பொருள் ஆக்கப் போட்டியில் எமது மாணவர்களும் ஆசிரியர்களும் ‘ICDL’ கற்கைநெறி புலமைப்பரிசில் போட்டியில் கலந்து தத்தம் பாடத் துறைகளில் செயற்பட்டு மாகாண மட்டத்தில் பாராட்டுப் பெற்றனர். மாணவர்கள் செல்வி க.கபீர்த்தனா, செல்வன்.ஜெ.சந்துருகேசன், ஆசிரியர்கள் சார்பில் திரு.வி.துஸ்யந்தன், திருமதி.ஜெ.தவலிங்கம் திருமதி.ஜெ.ஜெயதரன், திருமதி.பி.சரதன் ஆகியோருக்கு கல்லூரியின் பாராட்டுக்கள்.
2009ல் SEMP அனுசரணையில் பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட மென்பொருள் ஆக்கப் போட்டிகளில் 38 மாணவர்கள் சான்றிதழ் களைப் பெற்றுக் கொண்டனர்.
செல்விகள்.த.அகலிகா, சி.சரண்யா, பிரியங்கா, ஆகியோரைத் தலைவர், செயலாளர், பொருளாளராகக் கொண்டு செயற்படும் இம் மன்றத்தினருக்கும், ஆசிரியர் திருமதி.ரே.தர்மசீலன், திரு.ப.தர்மசீலன் ஆகியோருக்கும் நன்றிகள் பல.
சிறிய கால இடைவெளியின் பின் 12.03.2009ல் தனது ‘வணிகதீபம்’சுடர் 6ன் வெளியீட்டை வணிகமன்று நிகழ்த்தியது. மாணவர் தம் ஆக்கங்கள், துறைசார்ந்த ஏனையோரது ஆக்கங்கள் தாங்கிய தகவற் பெட்டகமாக இது வெளிவந்துள்ளது.
இம் மன்றில் த.கோகுலரமணன் தலைவராகவும், செ.பிருத்த்pகா செயலாளராகவும், செ.அசான் பொருளாளராகவும் இருந்து வருகின்றனர். பொறுப்பாசிரியர்களாக செல்வி.ஜெ.செந்திவேல், திருவாளர்கள் இ.நவகேதீஸ்வரன், வி.தயசீலன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
சமூகமன்று தலைவராக வி.பிருந்தாபனும், செயலாளராக றூ.பார்த்தீபனும், பொருளாளராக சி.முருகாந்தினி ஆகியோரும் செயற்படுகின்றனர். பொறுப்பாசிரியர்களாக திருமதிகள் அ.லிஸ்ரர் ஜோசப், வி.சக்திவேல், திரு.ஏ.தனேஸ்வரன், திரு.இ.ரமேஸ்குமார் ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர்.
2009ல் 2010 கலைப்பிரிவு மாணவர் களால் வரலாற்றுத் துறை சார்ந்த கண்காட்சி நடாத்தப் பெற்றது. கண்காட்சிக் கூடம் கால்கோளாகி மாணவர்கள் ஆக்கங்களும் தாங்கிய சஞ்சிகை ‘வரலாற்று நாதம்’ எனும் நூல் வெளியானது.
இம் மாணவ்ரகளுக்கும் நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி..வி.சக்திவேல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
2008ல் கால்கோளான புத்தாக்குநர் கழகம் ஆசிரியை திருமதி.ந.கமலநாதன் அவர்களது வழிநடத்தலில் மாணவர் தம்மிடம் மறைந்திருக்கும் ஆக்கத் திறன்களுக்கு ஊக்கந் தருவதாய்ச் செயற்படுகிறது. மாவட்ட ரீதியாக நடாத்திய போட்டியில் மாணவன்.சு.கரிகரன் (தரம் 10) SLIDE PROJECTS எனும் ஆக்கப்பொருளுக்கு வெள்ளிப் பதக்கமும் ரூப 3000 பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டார். வி.பிருந்தாபன் (தரம் 12) ஆக்கிய ஊயுமுநு CAKE BEETER பொருளுக்கு சான்றிதழ் கிடைக்கப்பெற்றது.
16.01.2009ல் கல்லூரியில் சுகாதாரக் கழகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கான கட்டடத் திறப்பு விழாவும் நடைபெற்றது. மாணவர் மத்தியில் உடல் உள ஆரோக்கிய மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இக்கழகம் போசாக்கு மாதத்தை முன்னிட்டு வலி வடக்குப் பிரதேசசபை நடாத்திய போட்டிகளில் பொது அறிவுப் போட்டியில் ம.கோகுலசாயி 2ம் இடததையும், இ.ஜெனார்த்தனி, இ.கஜனி, (பேச்சு) சான்றிதழ்களையும், க.கிரிசாந்தன் 1ம் இடத்தையும், (பேச்சு) பெற்றுக் கொண்டனர். மாணவர்களை வழிப்படுத்திய திருமதி.ந.கமலநாதன் செல்வி பு.இளையதம்பி ஆகியோருக்கு நன்றிகள்.
மேலும் பெண்களின் போசாக்கு மேம்பாடு, பற்சுகாதாரம், மருத்துவப் பரிசோதனை, காச நோய் பற்றிய விழிப்புணர்வு, டெங்கு ஒழிப்பு பற்றிய விடயங்களில் கவனம் செலுத்தி ஆலோசனைகள் வழிகாட்டல் கருத்தரங்குகள் என்பன நடாத்தப்பட்டு வருகின்றன.
கழகத் தலைவராக ச.கோகுலராஜ் செயலாளராக செ.சீராளன், ஆகியோர் இருந்து வரும் அதேவேளை வழிப்படுத்துபவராக பொறுப்பாசிரியராக திருமதி.ந.கமலநாதனும் இருந்து வருகின்றார்.
மாணவர்கள் செல்வன்.வி.பிருந்தாபன், செல்வி.சி.முருகாந்தினி, செல்வன்இ.மனோஜ் ஆகியோரை முறையே தலைவர், செயலாளர், பொருளாளராகக் கொண்டு செயலாற்றும் இடைவினைக்கழகம் பொது அறிவை மாணவர்கள் பெறும்பொருட்டு வாராந்தம் பொது அறிவுத் தகவல்களை காட்சிப்படுத்தியும், உயிர்காக்கும் இரத்ததானத்தை வழங்கியும் வருகிறது இக்கழகத்தினை ஆசிரியர்கள் திரு.அ.தயாபரன், திரு.இ.நவகேதீஸ்வரன், திருமதி.லெ.சோ.லொயிட் ஆகியோர் வழிநடாத்தி வருகின்றனர்.
கல்லூரி சாரணியர், வழிகாட்டிகள் வருடாந்த பாசறை நிகழ்வுகளில் பங்கு கொண்டு தமது செயற்றின்களை, அறிவு, திறன், மனப்பாங்குப் பரிமாற்றங்களை வெளிப்படுத்தி வருவதுடன், கல்லூரியின் விசேட வைபவங்களில், ஆலயப் பெருந்திருவிழாக்களில் தமது சேவைகளைச் சிறப்பாகப் புரிந்து வருகின்றனர். இவர்களை ஆசிரியர்கள் திரு.ம.ரவீஸ்வரன், திரு.வி.தயசீலன், திருமதி.ந.கமலநாதன், செல்வி.பி.பத்மநாதன் ஆகியோர் நெறிப்படுத்தி வருகின்றனர்.
கல்லூரியின் பாண்ட வாத்திய அணி விசேட தினங்களில் தன் பங்களிப்பை நல்கி வருகிறது. இவ்வணியினை திருமதி லெ.சோ.லொயிட் நெறிபப்டுத்தி வருகிறார்.
கல்லூரி மாணவரதும், ஆசிரியரதும் தேடலுக்கு களமாய் அமையும் நூலகம் பல செயற்றிட்டங்களை மாதாந்தம் நடாத்தும் அதேவேளை, திணைக்களத்தால், தனி நிறுவனங்களால் நடாத்தப்படும் போட்டிகளில் மாணவர்களைப் பங்குகொள்ள வைத்து வெற்றிகள் பெற உதவி நிற்கிறது. இவ்வாண்டு வகுப்பறை மட்டத்தில் நடாத்திய சஞ்சிகை ஆக்கப் போட்டியில் சௌக்கியம் (10A) ஐஸ்வரியம் (7C) சிதறல் (10C) ஆகிய சஞ்சிகைகள் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டன. நூலகத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் மாணவர்களாக செல்வன் க.பிரசாந்தன் (2010 உயிரியல்) செல்வி சௌ.பிரதர்சனா (2010 கலை) ஆகியோர் திகழ்கின்றனர்.
இத்தகைய செயற்பாடுகளில் மாணவரை ஈடுபடுத்தி, நெறிப்படுத்தி அவர்தம் உயர்ச்சிக்கு உதவும் நூலகக் குழுவினருக்கு நன்றிகள்.
நவீன கணனி யுகத்தில் கணனிக் கற்கை நிலையத்தின் (CLC) தேவை முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது. எமது கல்லூரியில் அமைந்திருக்கும் கணனிக் கற்கை நிலையத்தை பொறுப்பாசிரியர்கள் திரு.பா.தர்மசீலன், செல்வி.ம.சதாசிவம் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர். வலய மட்ட, மாகாண மட்ட மென் பொருள் ஆக்கப் போட்டிகளுக்குரிய ஆக்கங்களை ஆக்குவதற்கு இந்நிலையம் உதவுகிறது. மேலும் School Net, E.mail வசதிகளையும் இந்நிலையம் கொண்டுள்ளமையால் கல்லூரியின் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுவருகின்றன.
வழமைபோன்று ஆசிரியர்தம் நலன் களைக் கருத்திற் கொண்டு செயலாற்றுகி;ற ஆசிரியர் கழகம் திரு.ஏ.அனுசாந்தன் (தலைவர்) செல்வி.ஜெ.செந்திவேல் (செயலாளர்) திரு.பா.தர்மசீலன் (பொருளாளர்) ஆகியோரைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கல்லூரியின் அபிவிருத்தியில் அக்கறை காட்டிவரும் அதிபரைத் தலைவராகவும், திரு.ப.அருமைநாதன் அவர்களை செயலாளராகவும், ஆசிரியர் திரு.வே.சேந்தன் அவர்களைப் பொருளாளராகவும் கொண்டு செயற்பட்டு வருகிறது.
இன்றைய கல்லூரியின் தேவைகள்.....
தளபாடம்
மாணவர் வகை Type A கதிரை, மேசை 250
Type B கதிரை, மேசை 150
ஆசிரியர் வகை கதிரை 40
மேசை 35
நூல்நிலையம் கண்ணாடி அலுமாரி 10
மாணவர் மேசை (8’ X 4’) 10
கதிரை 40
புத்தக றாக்கை 10
நூல்கள் 1000
பௌதீக வளம்....
முற்றாக அழிக்கப்பட்டவை
நிர்வாக கட்டடம் - சாண்டேஸ் கட்டடம்
(110’X 25’)மலேயன்கட்டடம் (வகுப்பறைகள்)
மாணவர் விடுதி
மனையியில் அறை
துரைரத்தினம் - பிரதான மண்டபம்
சிற்றுண்டிச்சாலை
காகிதாதி விற்பனை நிலையம்
மரவேலை அறையும் செயற்பாட்டறையும்
கூடைப்பந்தாட்ட மைதானம்
டெனிஸ் மைதானம்
ஆண்களுக்கான சலகூடம் - 2 தொகுதி
பெண்களுக்கான மலசலகூடம் - 2 தொகுதி
பகுதியளவில் சேதமடைந்தவை
வாட் புளக் - உயர்தர விஞ்ஞான மாணவர் வகுப்பறைக் கட்டடம் (150’x25’)
முன்னைய உயர்தர கலை, வர்த்தக மாணவர் வகுப்பறைக் கட்டடம் (140’x20’)
திறந்த வெளிஅரங்கு (20’x20’)
பழைய மாணவர் சங்கக் கட்டடம் (90’x25’)
இக் கட்டடங்கள் அகற்றப்பட்டு பதிலீடாக
160’x40’ அளவ கொண்ட இரட்டை மாடிக் கட்டடம் (மேற்தளம்- பிரதான மண்டபம், கீழ்த்தளம் - உள்ளக விளையாட்டரங்கு)
இக் கட்டடத்துடன் இணைந்ததாக (160’x25) பார்வைக்கூடம். (Pavilion)
110’x25’ அளவு இரட்டை மாடிக் கட்டடம் (10 மூடிய வகுப்பறைகள்)
120’x25’ அளவுடைய இரட்டைமாடிக் கட்டடம் (இதற்குள் சிற்றுண்டிச்சாலை, மாணவர் வழிகாட்டல் ஆலோசனைக்கூடம், கவின்கலை அறைகள், செயற்பாட்டறை, விசேட கல்வி அலகு என்பன உள்ளடங்கும்)
சுற்றுமதில் (600 அடி)
விளையாட்டுமைதானத்தினை விசாலப்படுத்தலும், கூடைப்பந்து மைதானத்தினையும், டெனிஸ் மைதானத்தினையும் மீள உருவாக்குதல்
ஆண்கள் சலகூடம் - 2 தொகுதி
பெண்கள் மலசலகூடம் - 2 தொகுதி
முற்றாக அழிக்கப்பட்ட சாண்டேஸ் மண்டப அடித்தளத்தினை அகற்றுதலும், மண் நிரவுதலும்.
திறந்த வெளியரங்கு (30’x30’)அமைக்கப்பட வேண்டும்.
மனிதவளம்...
ஆசிரிய வள ஆளணியினர்
A/L கணிதம் 01
A/L பொருளியல் 01
ஆங்கிலம் 01
O/L கணிதம் 01
வழிகாட்டல் ஆலோசனை 01
உடற்கல்வி 01(ஆண்)
குடியுரிமைக்கல்வி 01
தமிழ் 01
விசேடகல்வி 01
கல்விசாரா ஆளணியினர்......
விவசாயத் தொழிலாளி 01
காவலாளி 01
நூலக உதவியாளர் 01
நூலகர் 01
ஆய்வுகூட உதவியாளர் 02
ஆய்வுகூட தொழிலாளி 01
என்றும் நினைப்போம்................
கல்லூரியின் அன்றாடச் செயற்பாடுகள் சிறப்பே நிகழ்ந்திட அருள்தரும் அன்னைக்குச் சிரந்தாழ்த்தி இன்றைய தினம் சிறப்படைய, பிரதம அதிதியாய் வருகை தந்த, பரிசில் நல்கவுள்ள பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள் கூறி, சிறப்பு விருந்தினராய் எம் அழைப்பை ஏற்று இங்கு வீற்றிருக்கும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.
கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளுக்கு, அதன் உயர்ச்சிக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிவரும் மாகாணக் கல்விச் செயலாளர், மாகாண, வலய, கோட்ட கல்விப் பணிப்பாளர் களுக்கும், உதவிக் கல்விப்பணிப்பாளர்களுக்கும், கணக்காளர், நிதியுதவியாளர், ஆசிரிய ஆலோசகர்கள், எழுதுவினைஞர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
கல்லூரியின் உயர்ச்சியில் ஒன்றுபட்டு உழைத்து நிற்கும், நிர்வாகச் சுமைகளை சுமந்து செவ்வனே நிறைவேற்றிவரும் பிரதி அதிபர் திரு.இ.சண்முகேஸ்வரன், அவருக்கு வலது கையாக இருந்து செயலாற்றும் உபஅதிபர் திரு.வே.சந்திரசேகர், பகுதித் தலைவர்கள் ஒவ்வொரு மாணவரதும் நலனில் அக்கறை கொண்டு அவர்தம் உயர்ச்சிக்கு உந்துதலாய் அமைந்து அயராதுழைத்து நிற்கும் ஆசிரியர்களுக்கும், கல்லூரிச் செயற்பாட்டிற்கு உதவிநிற்கும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.
இன்றைய உயர்ச்சி கண்டு மகிழும், அதன் செயற்பாடுகளை மனநிறைவோடு வாழ்த்தி நிற்கும் கல்லூரித் தாயின் பழைய மாணவர் மனமுவந்து நல்கும் அனைத்து உதவிகளுக்கும் நன்றிகள் பற்பல.
நிதியுதவிகளையும், ஏனைய உதவி களையும் நல்கி வரும் இலண்டன் பழைய மாணவர் சங்கம், கனடா பழைய மாணவர் சங்கம், அவுஸ்திரேலியா பழைய மாணவர் சங்கம், கொழும்பு பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி கூறுவதுடன், கல்லூரியின் தேவை அறிந்து அதற்கேற்ப கூட்டங்களை உடனுக்குடன் கூட்டி கல்லூரிச் செயற்பாடுகளுக்காக பல்வேறு வகைகளிலும் உதவிபுரிந்து வரும் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினருக்கு விசேடமாக நன்றிகள் கூறுகிறோம்.
2008ம் ஆண்டு எமது கல்லூரியின் 18 வயது வலைப்பந்தாட்ட அணி மலேசியா சென்று விளையாடுவதற்கு நிதியுதவி வழங்கிய 1989ல் க.பொ.த (சா/த) வகுப்பில் கற்ற பழைய மாணவர் களுக்கும், அதனை நெறிப்படுத்தி, வழிப்படுத்திய பழைய மாணவன் திரு.டீ.பாலேந்திரா அவர்களுக்கும் கல்லூரி சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கல்லூரிக்கான www.junioncollege.com எனும் இணையத்தளத்தை 2008ம் ஆண்டில் இருந்து தனது சொந்தச் செலவில் பழைய மாணவர் திரு.செ.கமலக்கண்ணன் (கனடா) உருவாக்கி அதனை செல்வன். திரு.செ.சிவசொரூபன் (பழைய மாணவன், பேராதனைப் பல்கலைக் கழகம்) நெறிப்படுத்தி வருகிறார். அவருக்கு உதவியாக திரு.செ.அஜிதகுமார் அவர்களும் செயற்பட்டு வருகிறார். அவர்களுக்கம் கல்லூரி சார்பில் நன்றிகள்.
பாடசாலையின் அபிவிருத்திக்குக் கைகொடுக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் எமது நன்றிகள்.
எம் அழைப்பையேற்று இங்கு பிரசன்னமாயிருக்கும் அனைத்து அன்புள்ளங் களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் கல்லூரிச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினைத் தந்துதவும் அனைவருக்கும் எது மனமார்ந்த நன்றிகள்.
இன்று வெளிவரும் கல்லூரியின் யூனியன் சிறப்பு மலருக்கு ஆசிகள் நல்கியோருக்கும், ஆக்கங்கள் தந்து உதவியோருக்கும் மலர்க் குழுவினருக்கும் நன்றிகள் பற்பல.
2009ம் ஆண்டில்; கல்லூரிக்கு வழங்கப்பட்ட உதவிகள்...........
2009 ஏப்ரலில் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் கொழும்புப் பழைய மாணவர் சங்கத்தினூடாக வழங்கிய உதவிகள்.
மாணவர்களின் மதிய உணவுக்காக ரூபா 67000 கொழும்பு பழைய மாணவர் சங்கத்திடம் வழங்கியுள்ளனர்.
2009 மார்ச்சில் ரூபா 60000க்கு கிரிக்கட், கரப்பந்து உபகரணங்கள் கொள்வனவு செய்து வழங்கியமை.
இலண்டன் வாழும் திருமதி. சொர்ணதேவி தம்;பிப்பிள்ளை அவர்களால் எமது கல்லூரி மாணவி செல்வி.கபீர்த்தனா கமலச் சந்திரன் அவர்களின் கற்றலுக்காக மாதாந்தம் ரூபா 2000 வீதம் ஒரு வருடத்திற்கு வழங்கியுள்ளனர்.
இலண்டன் பழைய மாணவர் சங்கத் தலைவர் தனது தாயார் திருமதி.லி;ல்லி தங்கரட்ணம் தம்பையா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் அன்பளிப்பு ரூபா 5000 ஆகும்.
இலண்டனில் வாழும் பழைய மாணவன் திரு.கே.கருணாகரன் அவர்களால் எமது கல்லூரியின் ஹொக்கி விளையாட்டு உபகரணங்களுக்கு வழங்கிய அன்பளிப்பு ரூபா 150000 வழங்கியுள்ளார்.
கனடா பழைய மாணவர் சங்கம்..........
2009ல் பரிசளிப்பு விழாவிற்காக கனடா வாழ் பழைய மாணவர் திரு.செ.செல்வக்கமலன் அவர்களால் வழங்கப்பட்ட அன்பளிப்பு ரூபா 10000 ஆகும்.
ஏனைய அன்பளிப்புக்கள்.........
எமது பரிசளிப்பு விழாவிற்கு நிதியுதவி செய்த கனடா வாழ் வைத்தியகலாநிதி திரு.க.வைத்தியநாதன் குடும்பத்தார் வருடா வருடம் அமரர்.ஆசிரியமணி.திரு.கந்தையா ஞாபகார்த்தமாக வழங்கும் ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி வருகிறார்கள்.
லண்டன் வாழ் செல்வி.இ.தேவராணி தனது தந்தையார் S.K இராசையா (முன்னாள் உப அதிபர் யா/யூனியன் கல்லூரி) இறந்து 50 ஆண்டு நினைவாக ரூபா 50000 வை மாணவர்களின் பரிசுக்காக வழங்கியுள்ளமை.
திருமதி.பத்மினி தவராசா தனது கணவனின் (பழைய மாணவன்) ஞாபகார்த்தமாக பரிசளிபபு விழாவுக்கு ரூபா 50000 நன்கொடை வழங்கியுள்ளார். இவர் சென்ற வருடமும், இவ் வருடமும் வழங்கியுள்ளதுடன் இனி வருங் காலங்களிலும் தொடர்ந்தும் இவ் உதவிகளைப் புரிவதற்கு முன்வந்துள்ளார். இவர் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களுக்கும், 100வீதம் சித்திக்கு உழைத்த ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கியுள்ளார்.
சிட்னி பழைய மாணவர் சங்கம் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினூடாக ஹொக்கி விளையாட்;டுக்காக கோல்கள், பந்து வாங்வதற்காக ரூபா 49000 அன்பளிப்புச் செய்தமை.
கொழும்பில் வசிக்கும் பழைய மாணவன் திரு.ஜெயரஞ்சன் இரட்ணசிங்கம் அவர்களால் செல்வி.ஜெனட்சுதர்சினி பாலச்சந்திரன் அவர்கட்கு பல்கலைக்கழகக் கல்வியை தொடருவதற்காக மாதாந்தம் ரூபா 2000 வீதம் 18 மாதங்களுக்கு ரூபா 36000 அன்பளிப்புச் செய்துள்ளார்.
சிங்கப்பூர் வாழ் பழைய மாணவர் னுச.P.N.சுகந்தன் அவர்களால் வறிய மாணவர்கட்காக வழங்கப்பட்ட அன்பளிப்பு ரூபா 50000 (2008ல்) ரூபா 50000 (2009ல்) வழங்கப்பட்டுள்ளது.
2009ல் பழைய மாணவன் ஸ்ராலின் நாகலிங்கம் அவர்களால் ரூபா 7000 பெறுமதியான நூல்களை கல்லூரி நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தமை.
யூனியன் கல்லூரியின் 18 வயது வலைப்பந்தாட்ட அணியினர் மலேசியாவில் 2008ல் நடந்த வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குகொள்வதற்கு யூனியன் கல்லூரியில் 1989ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரம் படித்த பழைய மாணவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதனை பழைய மாணவன் B.பாலேந்திரன் மூலம் வழிப்படுத்தியுள்ளார்.
மேற்படி வலைப்பந்தாட்டப் போட்டிக்கு நிதியுதவி செய்தோர் விபரம்........
லண்டன் பழைய மாணவர் சங்கம்
1. திரு.அகிலன் 50 பவுண்ஸ்
2. திரு.இளங்குமரன் 50 பவுண்ஸ்
3. திரு.சி.ஜெயந்தன் 50 பவுண்ஸ்
4. திரு.சோமஸ்கந்தன் 50 பவுண்ஸ்
5. திரு. உ. குலன் 50 பவுண்ஸ்
6. திரு.ஜெயரங்கன் 50 பவுண்ஸ்
7. திரு.சிவசுதன் 150 பவுண்ஸ்
8. திரு.திலீபன் (ருளுயு) 150 பவுண்ஸ்
9. திரு.அரவிந்தன் (ருளுயு) 150 பவுண்ஸ்
10. திரு.றஜீபன் 100 பவுண்ஸ்
11. திரு.பவன் 100 பவுண்ஸ்
12. திரு.பிறேம் 50 பவுண்ஸ்
13. திரு.நிசந்தன் 100 பவுண்ஸ்
14. திரு.சுகன் 50 பவுண்ஸ்
15. திரு.கோகுலன் 60 பவுண்ஸ்
16. திரு.காண்டி 230 பவுண்ஸ்
17. திரு.சுகந்தன் 250 பவுண்ஸ்
18. திருமதி.றதி 150 பவுண்ஸ்
19. திரு.பத்மநாதன் 140 பவுண்ஸ்
20. திரு.வேந்தன் 184 பவுண்ஸ்
21. திரு.தயாளன் 140 பவுண்ஸ்
22. திரு.சுரேஸ் 150 பவுண்ஸ்
23. திருமதி.ஆனந்தி 100 பவுண்ஸ்
24. திரு.கஜேந்திரன் 100 பவுண்ஸ்
25. திரு.அன்ரன் 100 பவுண்ஸ்
26. திருமதி.மல்லிகா 50 பவுண்ஸ்
27. திரு.ஜெயகுமார் 50 பவுண்ஸ்
28. திரு.கிருபா 50 பவுண்ஸ்
29. திரு.தில்லை 50 பவுண்ஸ்
30. திருமதி.பபித்தா (கனடா) 20400 ருபா
31. திரு.செந்தூரன் 20000 ருபா
32. திரு.செந்தூரன் (சவூதி) 10000 ருபா
33. திரு.நடனசபேசன் (அவுஸ்திரேலியா) 20000 ருபா
34. திருமதி.சாயினி (அவுஸ்திரேலியா) 10000 ருபா
35. திரு.ரூபன் ((அவுஸ்திரேலியா) 10000 ரூபா
36. திரு.யாழ்கோபன் (கனடா) 43000 ரூபா
நன்றி.
திரு.சு.புண்ணியசீலன்
அதிபர்,
யா/யூனியன் கல்லூரி.