News

தெல்லிப்பழை கோட்டமட்ட ஆங்கிலதினப்போட்டியில் யூனியன் கல்லூரிக்கு 15 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.
May 30, 2009

அண்மையில் வெளியிடப்பட்ட மேற்ப்படி போட்டி முடிவுகளின் அடிப்படையிலேயே யூனியன் கல்லூரிக்கு 15 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.

மேற்ப்படி போட்டிகள் இம்மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற்றது.இதற்ககாக யூனியன் கல்லூரியில் இருந்து பங்குபற்றியவர்களில் 35 மாணவர்கள் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளார்கள் அந்தவகையில் யூனியன் கல்லூரிக்கு
15 முதலாம் இடங்களும்
10 இரண்டாம் இடங்களும்
10 மூன்றாம் இடங்களும் கிடைத்துள்ளன.
மேற்ப்படி போட்டிகளின் வலையம் மற்றும் மாவட்டமட்ட போட்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யூனியன் கல்லூரியில்இருந்து முதன்முறையாக பங்குபற்றிய கொக்கி அணி(19 வயது ஆண்கள் அணி) வலையமட்டத்தில் முதல்இடத்தைப்பெற்று சம்பியனாகியுள்ளதுடன் எதிர்வரும் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்டமட்ட போட்டிகளில் இவ் அணி பங்குபற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை காலை(31.05.2009)9மனிக்கு மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியில் இடம்பெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.