News

கணித பாடம் II மீள் பரீட்சை ஜனவரி 24ம் திகதி இடம்பெறும்.
Jan 9, 2009

நடைபெற்று முடிந்த க.பொ.த (சா/தர) பரீட்சையில் புதிய பாடத்திட்த்திற்கமைவான கணித பாடம் II பரீட்சை வினாத்தாள் செல்லுபடியற்றதாக்கப்பட்டதற்க்கு இணங்க கணித பாடம் பகுதி இரண்டுக்கான மீள் பரீட்சை எதிர்வரும் 24ம் திகதியன்று நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற பரீட்சை மத்திய நிலையங்களிலேயே மேற்ப்படி புதிய பரீட்சை நடைபெறும் எனவும் அதற்க்குரிய நுழைவுப் பத்திரம் மற்றும் நேரசூசி என்பன 2009 கல்வி ஆண்டுக்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின் பாடசாலை அதிபர்களுக்கு தபாலிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மேறப்படி பரீட்சைக்கு 50 இலட்சம் ரூபா நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.