News

க.பொ.த உயர்தர பரீட்சை அனுமதி ஆங்கில பாட சித்தி கட்டாயமில்லை.-கல்வியமைச்சு
Jan 4, 2009

பாடசாலைகளில் கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு அனுமதி பெறுவதற்க்காக சாதாரண பரீட்சையில் ஆங்கிலப்பாடத்தில் சித்தியடைய வேன்டியது கட்டாயமில்லை என்று கல்வியமைச்சின் செயலாளர் நிமால் பண்டார தெரிவிக்கின்றார்.

2008ம் ஆண்டு க.பொ.த சாதாரண பாடவிதானங்களுக்கு ஏற்ப்ப உயர்தர பரீட்சைக்காக ஆறு பாடங்களை மாணவர்கள் கட்டாயம் கற்க்க வேண்டிய அதேவேளை மேலும் மூன்றுபாடங்களில் தோற்ற வேண்டும்.

இதற்க்கமைய புதிய பாடத்திட்டத்தின்படி கடந்த வருடம் சாதாரன பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றிய மாணவர்களக்கு கட்டாயமாக ஆறுபாடங்களக்கும் மூன்று மேலதிக பாடங்களுக்கும் தோற்ற வேன்டிய நிலை ஏற்ப்பட்டது.

இந்த கட்டாய பாடங்களில் மொழி,கணிதம் உட்பட ஆறுபாடங்களில் சித்தி பெற வேண்டும். அதேவேளை இப்பாடங்களில் மூன்று பாடங்களில் சிறப்பு சித்தி பெற்றிருப்பது க.பொ.த உயர்தரத்திறக்கான பரீட்சைக்கான தகமையாக கருதப்படும்.

இந்நிலையில் மேலதிக பாடங்களில் பெறப்படும் சிறப்பு சித்தி உயர்தர பரீட்சைக்கான தகுதியாக கருதப்படமாட்டாதென்று கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.