News

யூனியன் கல்லூரியின் மாணவர் தேர்ச்சியறிக்கை வழங்கும் வைபவம் இம்மதம் 14ம் திகதி இடம்பெறும்.
Dec 7, 2008

இயற்க்கை அனர்த்தம் காரணமாக குறிப்பிட் திகதியில் பரீட்சைகள் நிறைவு பெறாத காரனத்தால் இம் முறை மாணவர் தேர்ச்சியறிக்கை வழங்கும் வைபவம் காலம் தாழ்த்தி இடம்பெறுகின்றது.

பெற்றோர் சந்திப்பும் தேர்ச்சியறிக்கை வழங்கலும் என்ற மேறப்படி வைபவம் இம்மாதம் 5ம் திகதி நடைபெறவே முன்னர் ஏற்பாடாகி இருந்தது எனினும் கடந்த சில தினங்கழுக்கு முன்னர் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற இயற்க்கை அனர்த்தம் காரணமாக குறிப்பிட்ட திகதியில் நிறைவுபெறவேன்டிய தவணைப்பரீட்சைகள் இம் மாதம் 6ம் திகதியே நிறைவுபெற்றது இதனால் மேற்ப்படி நிகழ்வு இம்மாதம் 14ம் திகதி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ளதால் மேற்ப்படி நிகழ்வில் பெற்றோர்கள் கலந்து கொள்வதற்க்கான விசேட அனுமதியை பாதுகாப்பு தரப்பிடம் பெற்றுள்ளதாக பிரதியதிபர் திரு சன்முகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ் தவனைப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களின் விபரங்கள் கல்லூரியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.