News

யூனியன் கல்லூரியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை(15/10/2008) இடம்பெறும்.
Oct 14, 2008

யுhழ் தொல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை(15/10/2008) காலை 9 மனிக்கு ஆரம்பமாகும்.

மேற்ப்படி விழா குறித்து கருத்து வெளியிட்ட பிரதியதிபர் பரிசளிப்பு விழாவிற்க்குரிய முக்கிய ஏற்ப்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெற்றோர்கள் மற்றும் பழையமாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்க்குரிய பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி விரைவில் கிடைகக்கும் என தாம் நம்புவதாக பிரதியதிபர் திரு சன்முகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வருட பரிசளிப்பு விழாவிற்க்கு பிரதமவிருந்தினராக யாழ் பல்கலைக்கழக துனைவேந்தர் திரு நா.சன்முகலிங்கனும் சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்வி அதிகாரி(தெல்லிப்பழைக்கோட்டம்) சா.கைலாசநாதனும் சிறப்பு பரிசில் வழங்குபவராக திருமதி கொளரி சன்முகலிங்கனும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இப்பரிசளிப்பு விழாவில் கடந்த ஆண்டு க.பொ.த(உ/த) பரிட்சையில் அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப்பெற்ற மாணவர்களான கீர்த்தனா கமலச்சந்திரன்,சுரேந்திரன் தினேஸ்க்குமார், ஜெனட்சுதர்சி பாலச்சந்திரன் ஆகியோருக்கும் கடந்த ஆண்டு பாவோதல் போட்டியில் தேசியமட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற செல்வன் சுந்தரமூர்த்தி தசாங்கனுக்கும் பதக்கம் சூட்டி கொளரவிக்கப்படவுள்ளனர்.