News

யாழ் யூனியன் கல்லூரியில் ஆங்கிலப்பாடத்துக்கான ஆசிரியருக்கு பற்றாக்குறை.
Jul 28, 2008

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆங்கிலப்பாடத்துக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்லூரியின் பிரதியதிபர் சன்முகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை ஆங்கிலப்பாடத்துக்கென 4 ஆசிரியர்களும் உயர்தரத்துக்கு 2 ஆசிரியர்களும் தேவைப்படுவதாகவும் ஆனால் கல்லூரியில் மிகக்குறைவான ஆசிரியர்களே உள்ளதால் ஆங்கிலப்பாடத்துக்கான கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல் உள்ளதாக பிரதியதிபர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடையம் குறித்து கல்வித்தினைக்கள அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும் உரிய பலன் கிடைக்கவில்லை எனக்கூறும் பிரதியதிபர் இதனால் தாமாகவே இரு ஆசிரியர்களை நியமிக்க வேன்டும் என்றும் இதற்க்கு மாத அடிப்படையில் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் யாராவது உதவி புரிந்தால் இத்தேவையை உடனடியாக நிவர்த்தி செய்யலாம் என்றும் பிரதியதிபர் மேலும் தெரிவித்தார்.

இது விடையம் குறித்து யாராவது உதவி புரிய முன்வந்தால் அது குறித்தான செய்திகளை நாம் எதிர்பார்க்கின்றோம்.