News

இவ்வாண்டு மெய்வல்லுனர் போட்டிகளில் யூனியன் கல்லூரிக்கு கோட்டமட்டத்தில் 22 முதலாம் இடங்கள்.
Jul 17, 2008

நடந்து முடிந்த இவ்வாண்டுக்கான மெய்வல்லுனர் போட்டிகளின் முடிவுகள் கல்லூரியால் வெளியிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையிலேயே யூனியன் கல்லூரிக்கு கோட்டமட்டத்தில் 22 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.

இவ்வாண்டுக்குரிய மெய்வல்லுனர் போட்டிகளில் யூனியன் கல்லூரி கோட்டமட்டத்தில் மட்டுமல்லாது வலையம் மற்றும் மாவட்ட மட்டத்திலும் பல சிறப்பான அடைவுகளை பெற்றுள்ளது.கோட்டமட்டத்தில் 22 முதலாம் இடங்களையும் 21 இரண்டாம் இடங்களையும் 23 மூண்றாம் இடங்களையும் பெற்றுள்ளது.

வலையமட்டத்தில் 10 முதலாம் இடங்களையும் 08 இரண்டாம் இடங்களையும் 05 மூண்றாம் இடங்களையும் யூனியன் கல்லூரி பெற்றுள்ளதோடு மாவட்டமட்டத்தில் 09 முதலாம் இடங்களையும் 04 இரண்டாம் இடங்களையும் 04 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது.

இதேவேளை மேலும் சில போட்டிமுடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.2008ம் ஆண்டுக்குரிய மென்பந்து கிரிக்கற்போட்டியில் யூனியன் கல்லூரி அணி கோட்டமட்டத்தில் மூண்றாம் இடத்தைப்பெற்று மாவட்டமட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.
2008ம் ஆண்டுக்குரிய வலைப்பந்து போட்டிகளில் கோட்டமட்டத்தில் 15வயது,17வயது,19வயது அணிகள் முதலாம் இடத்தைப்பெற்று சம்பியனாகியுள்ளன.வலையமட்டத்தில் 19வயது அணி இரன்டாம் இடத்தையும் மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று மாகாணமட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

2008ம் ஆண்டுக்குரிய கரப்பந்தாட்ட போட்டிகளில் வலையமட்டத்தில் 19 வயது பெண்கள் அணி இரன்டாம் இடத்தை பெற்றதோடு மாவட்டமட்டத்திலும் இரன்டாம் இடத்தைபெற்றுள்ளது.இதேவேளை இவ்வாண்டுக்குரிய சதுரங்கப்போட்டியில் 15மற்றும் 19 வயது ஆண்கள் அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளது.