News

மாகாணமட்டம் தேசியமட்டம் போன்ற பலமட்டங்களில் பல வெற்றிகளைப்பெற்றுத்தந்த யாழ் யூனியன் கல்லூரியின் வலைப்பந்து அணியினரன் வெற்றிக்கு திறமை மிக்க பயிற்றுனர்களும் ஆசிரியர்களும் பங்காற்றியுள்ளனர்
Jun 19, 2008

இலங்கைப் பாடசாலைகள் உதைபந் தாட்ட சம்மேளனத்தினால் யாழ்.மாவட்டத் தில் வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே ஈ.எஸ்.பேரம்பலம் சக நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத் தப்பட்ட 17 வயதுப் பிரிவினருக்கான உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மானிப் பாய் இந்துக் கல்லூரி வலிகாமம் கல்வி வலய சம்பியனாகத் தெரிவு செய்யப்பட் டுள்ளது.
மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதா னத்தில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் தெல்லிப் பழை மகாஜனாக் கல்லூரியும் மோதிக் கொண்டன.
போட்டி தொடங்கியபோது இருந்த வேகம் இரு அணிகளிடமும் தொடர்ந்து போட் டியில் காணப்படவில்லை. தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியே மைதானத் தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது.
மகாஜனாக் கல்லூரி அணியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் தடுத்து விளையாடியதுடன் கோல்கள் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டது. இந்நிலையில் மானிப்பாய் இந்துக் கல்லூரி தனது முதலா வது கோலைப் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல் லூரி உற்சாகத்துடன் கோல்கள் பெறும் முயற்சியில் ஈடுபட்டு ஆட்டம் நிறைவு பெற்றபோது 4:0 என்ற கோல் கணக்கில் மகாஜனாக் கல்லூரியை வென்று வலிகா மம் கல்வி வலய சம்பியனாகத் தெரிவுசெய் யப்பட்டது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயமும் மோதிக் கொண்டன. இதில் யூனியன் கல்லூரி 3:0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீமுருகன் வித்தி யாலயத்தை வெற்றிகொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாட சாலைகள் மாவட்ட மட்டத்தில் இடம் பெறும் போட்டிகளில் கலந்துகொள்ளவுள் ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
by Uthayan