News
மாணவர்களுக்கான அடையாள இலக்கத்தினை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
May 7, 2008
சகல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான மாணவர் அடையாள இலக்கத்தினை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவக்கை எடுத்துள்ளது.
இதற்க்கமைய பாடசாலைகளில் தற்ப்போது நடமுறையிலுள்ள தினவரவு இடாப்பு,மாணவர் விலகிச்செல்லுதல் தொடர்பான ஆவணம் அத்தோடு மாணவர் விடுகைப்பத்திரம் என்பவற்றில் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய திருத்தங்களை மேற்க்கொள்ளுமாறு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு தர்மதாச சகல பாடசாலை அதிபர்களையும் பணித்துள்ளார்.
மாணவர் அடையாள இலக்கப்பாவனை தொடர்பாகவும் அதற்க்கான திருத்தங்களை மேற்க்கொள்வது குறித்துமான கலந்துரையாடல் கடந்த மாதம் 5ம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.