News

மாவட்ட 19 வயதுப் பிரிவு வலைப்பந்தாட்டம் யூனியன் கல்லூரி வென்று மாவட்டச் சம்பியனானது
May 22, 2008

யாழ். மாவட்டப் பாடசாலை அணிக ளுக்கு இடையே இடம்பெற்ற 19 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றிபெற்று மாவட்ட சம்பியனா கத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன.
இரு அணிகளும் ஏற்கனவே வலிகா மம் கல்வி வலயபப் போட்டிகளில் மோதிக் கொண்ட அணிகள் என்பதுடன் சண்டிலிப் பாய் இந்துக் கல்லூரி முதலாம் இடத்தையும் யூனியன் கல்லூரி இரண்டாம் இடத்தை யும் பெற்றுக் கொண்ட அணிகளும் ஆகும்.
இந்தப் போட்டியென்பது, இரு அணிக ளுக்கும் தன்மானப் போட்டியாகவும் அமைந்திருந்தது. விட்டதை மீளப்பெற வேண்டும் என்ற துடிப்புடன் யூனியன் கல்லூரியும், பெற்றதைப் பறிகொடுத்து விடக்கூடாது என்ற நம்பிக்கையுடனும் இந்துக் கல்லூரியும் ஆரம்பம் முதல் சிறப் பாக ஆடின.
போட்டியென்றால் போட்டியாகவே இரு அணிகளும் விளையாட அணிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களும் மைதானத்திற்கு வெளியால் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார்கள்.
முதல்பாதி ஆட்டம் யூனியன் கல்லூரி 15 புள்ளிகளையும், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி 10 புள்ளிகளையும் பெற்ற நிலை யில் ஆட்டம் இடைவேளைக்காக நிறுத் தப்பட்டது.
இரண்டாம் பாதி ஆட்டம் மீண்டும் பலத்த போட்டியாகவே ஆரம்பமாகியது. இரு அணிகளுமே புள்ளிகளைப் பெறும் முயற் சியில் கவனம் செலுத்திய வேகத்தில் எதி ரணி புள்ளிகள் பெறுவதினை தடுப்பதிலும் கவனம் செலுத்தி விளையாடினார்கள்.
இதன் காரணமாக எந்த அணி எந்த அணியை இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேல திக புள்ளிகளைப் பெறும் என்று கூற முடி யாத அளவுக்கு இரு அணிகளும் மிக வும் துடிப்புடன் மாறி மாறி புள்ளிகளைப் பெற் றுக் கொண்டன. இரண்டாம் பாதி ஆட் டத் தின் முடிவில் இரு அணிகளும் தலா 12 புள்ளி களை மட்டும்மே பெற்றுக் கொண்டன.
ஆட்டம் நிறைவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி 27:22 புள்ளிகள் என்ற அடிப்படையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி கொண்டு யாழ். மாவட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப் பட்டதுடன், மாகாண மட்டப் போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியும், வட மராட்சி இந்து மகளிர் கல்லூரியும் மோதிக் கொண்டன. ஆட்ட நிறைவில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி 23:16 புள்ளிகள் என்ற அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரியை வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
by Uthayan