News
யாழ் யூனியன் கல்லூரியின் அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து ஆசிரியர்கள் சுகயீனலீவுப்போராட்டம்.
May 13, 2008(யாழ்ப்பாணம்)
யாழ் யூனியன் கல்லூரியின் அதிபர் திரு புண்னிய சீலன் அவர்கள் உடுவில் கல்விக்கோட்டத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்தே ஆசிரியர்கள் இப்போராட்டத்தை நடத்துகின்றனர்.
இன்று13/05/2008) ஆரம்பமான இவ் சுகயீன லீவுப்போராட்டம் நாளையும் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.அதிபரின் இடமாற்றமானது முறைகேடாக திடிரென இடம்பெற்ற ஒன்று என்றும் இதனை ஆட்சேபித்தே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
இவ்விடையம் குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.