News

யூனியன் கல்லூரியின் பழையமாணவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் தேவைகளறிந்து கை கொடுத்து வருவதாக கல்லுரி அதிபர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Apr 2, 2008

எந்த ஒரு பிரஜையும் தனக்கு கல்வி தந்த தாயை மறந்துவிடுவதில்லை அந்தவகையில் எமது கல்லூரியின் பழையமாணவர்களும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.
நாட்டின் யுத்த நிலமை தொழில் வாய்ப்புக்கள் கருதி புலம் பெயர்ந்து கடல் கடந்து அந்நிய நாடுகளில் அடைக்கலம் புகுந்த எம் கல்லூரி பழையமாணவர்கள் தூர நோக்குடன் கல்லூரியின் தேவைகளை அறிந்து தமது உதவும் கரங்களை தொடர்ந்தும் நீட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கனடா மற்றும் இலன்டன் பழைய மாணவர் சங்கம் பரிசுத்தினம் விளையாட்டுப்போட்டி மற்றும் மாணவர்களின் மதிய உணவு போன்ற பலவற்றுக்கு தமது தாராள உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்தார்.
இவர்களைப்போல ஏராளமான பழையமாணவர்களும் கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை காட்டி அதன் அனைத்து செயற்ப்பாடுகளிலும் கை கொடுத்து ஒத்துழைப்புக்கள் நல்கி வருவது கல்லூரி சமூகத்துக்கு மேலும் மேலும் மன நிறைவைத்தருகின்றது என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.