News
மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் யாழ் யூனியன் கல்லூரியின் இரு அணிகள் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
Apr 27, 2008
மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளுக்கான ஒளிப்பதிவு கடந்த மாதம் 15ம் திகதி(15.03.2008)யாழ்ப்பானம் வேம்படி மகளிர்கல்லூரியில் இடம் பெற்றது. அதனடிப்படையிலான முடிவுகளே தற்ப்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் யாழ் யூனியன் கல்லூரியின் வில்லுப்பாட்டு மற்றும் தனி இசை(பிரிவு-04) ஆகிய அணிகளே மாகாண மட்டத்தில் முதலிடத்தைப்பெற்றுள்ளன.
இதன் சேசிய ரீதியிலான போட்டிகள் அடுத்த மாதம்(வைகாசி மாதம்) 9 மற்றும் 10ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை கொழும்புக்கு அழைத்துச்செல்லுதல் தொடர்பான பிரயான ஒழுங்குகள் தற்ப்போது மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக இத்துறைக்குப்பொறுப்பான ஆசிரியர் திரு தவசோதிநாதன் அவர்கள் எமக்குத்தெரிவித்துள்ளார்.
மாகாண மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை திருகோணமலைக்கு அழைத்துச்செல்வதில் உள்ள போக்கு வரத்துச்சிக்கல் காரனமாக இப்போட்டிகள் யாவும் யாழ்ப்பானத்திலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டன என்பது இங்கு குறிப்பித்தக்கது.