News
யாழ் யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒவ்வொரு போயா தினங்களிலும் காலை 9மனிக்கு யாழ்ப்பானம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியில் இடம்பெறும் என பழையமாணவர் சங்க செயலாளர் திரு சுகிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Mar 9, 2008
யாழ் யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒவ்வொரு போயா தினங்களிலும் காலை 9மனிக்கு யாழ்ப்பானம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியில் இடம்பெறும் என பழையமாணவர் சங்க செயலாளர் திரு சுகிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தனது நிர்வாகப்பதவியை ஏற்றுக்கொன்ட திரு சுகிர் அவர்களிடம் புதிய நிர்வாகக்குழவின் செயற்பாடுகள் தொடர்பில் கேட்க்கப்பட்டபோதே அவர் பொதுக்கூட்டம் தொடர்பிலான இவ் விடையத்தை குறிப்பிட்டார்.
யூனியன் கல்லூரி உயர்பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ளதால் அங்கு இவ்வாறன பொதுக்கூட்டங்களை நடத்தமுடியாததன் காரனமாக இரமநாதன் கல்லூரியில் இக்கூட்டத்தை ஒழுங்குசெய்துள்தாகவும் முடிந்தளவு சிறப்பாக இக்கூட்டங்கள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் கல்லூரி அதிபரின் வேன்டுகோளுக்கினங்க தற்ப்பொளுது தரம் 10ம் ஆண்டு மாணவர்களுக்கு கீழ் வழங்கப்பட்டு வரும் மதிய உனவை ஏனைய சகல மாணவர்களுக்கும் வழங்கும் முகமாக கல்லூரி தொடர்பில் உதவிவழங்கும் பல அமைப்புக்களுடன் தொடர்புகொன்டுள்ளதாகவும் விரைவில் அது சாத்தியமாகும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பழைய நிர்வாகத்தின் கீழ் இருந்த சகல வரவு செலவு விடையங்களையும் தற்ப்பொளுது ஒழுங்குபடுத்தும் பணி இடம்பெறுவதாகவும் இவ் வேலை முடிந்த பின் அவை பற்றி கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.அத்துடன் நிர்வாகப்பனிகள் தொடர்பிலான விடையங்களை அடுத்தடுத்து இடம்பெறும் கூட்டங்களுக்கு பின்பே அறிவிக்கமுடியும் எனவும் கூறினார்.