News

இவ்வருட இறுதியுடன் ஓய்வுபெறுவதாக கல்லூரி அதிபர் அறிவித்துள்ளார்.
Mar 28, 2008

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் அதிபர் திரு புன்னியசீலன் அவர்கள் இவ்வாண்டு இறுதியுடன் கல்லூரியில் இருந்து விலகிச்செல்ல என்னியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிபரின் பதவி விலகல் தொடர்பாக நீன்ட காலமாக இருந்துவந்த சந்தேகம் தொடர்பில் கேட்க்கப்பட்டபோதே அவர் இத்தகவல்களை தெரிவித்தார்.
இவ்வருட இறுதியுடன் தனது 55 வயது பூர்த்தியடைவதால் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தனக்கு பின்பு வரும் புதிய அதிபர் இக்கல்லூரியை சிறப்புற வழிநடத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அந்த நம்பிக்கையுடன் தனது பதவி விலகல் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஓய்வுபெறுதல் தொடர்பான தனது தீர்மானம் ஒரு வகையில் மன நிறைவையும் மறுமுனையில் வேதனையையும் ஏற்ப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட அதிபர் தனது காலத்தில் முடிந்தளவு கல்லூரி வளர்ச்சிக்காக உழைத்த மன நிறைவால் ஓய்வுபெறுதல் தொடர்பான கவலை குறைவடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு யுத்த சூழ்நிலைகளினால் மிகவும் சிக்கலடைந்த காலப்பகுதில்த்தான் இவர் இக்கல்லூரியை பொறுப்பெடுத்துக்கொண்டார். ஆயினும் இவரது அயராத பல முயற்ச்சியினால் இக்கல்லூரி பெரு வளர்ச்சி கன்டது என்பது அங்கு குறிப்பிடத்தக்கது.
ஏனைய கல்லூரிகளில் இருந்து இக்கல்லூரியின் தனித்துவங்களை பாதுகாக்கவென பல புதிய திட்டங்களை பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய இவர் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் மிக நெருக்கமாக பழகி அவரவர் கல்வித்தேவைகளை சரிவர இனம் கண்டு அவற்றை நிறைவேற்றினார். குறிப்பாக திறமையான மாணவர்களை பாராட்டுவதும் ஏனையவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதிலும் இவர் அரும்பாடுபட்டார் அத்துடன் போட்டிகளில் பங்கு பற்றும் வீரர்களுடன் சேர்ந்து சகல இடங்களுக்கும் சென்று அவர்களை உற்ச்சாகப்படுத்தி பல வெற்றிகளையும் இக்கல்லூரிக்காக பெற்றுத்தந்தார்.
இவரின் ஓய்வு பெறுதல் உன்மையில் வளர்ச்சியை நோக்கிச்சென்றுகொன்டிருக்கும் இக்கல்லூரிக்கு பாதிப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை இருப்பினும் இவரின் இடத்துக்கு வருபவர் மிகச்சிறப்பாக செயலாற்ற வேன்டும் என்பதே அனைவரினதும் வேன்டுதலாகும்.