News
சென்.ஜோன்ஸ் யூனியன் ஆட்டம் சமநிலையில் முடிந்தது இராகுலன் 73 ஓட்டங்களை விளாசினார்
Mar 20, 2008
யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவினர்களுக்கு இடையே இடம் பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப் பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டி சமநிலை யில் முடிவடைந்துள்ளது.
சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத் தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முத லில் துடுப்பெடுத்தாடிய யூனியன் கல் லூரி 70.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
க.இராகுலன் 73 ஓட்டங்களையும், கே.பிரசாந்தன் 20 ஓட்டங்களையும், எஸ். தனுசன் 19 ஓட்டங்களையும் பெற்றார்கள்.
சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பில் பந்து வீசிய தவநீதன், அச்சுதன் ஆகியோர் முறையே 12,15 ஓட்டங்களுக்குத் தலா 2 விக்கெட் டுகளையும் கரிவதனன், லருசன், எவோன் சன், விதுசன், கஜதீபன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 42: 1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட் டங்களைப் பெற்றுக் கொண்டது.
விதுசன் 15ஓட்டங்களையும், லருசன் 15 ஓட்டங்களையும், தவநீதன் 11 ஓட்டங் களைப் பெற்றார்கள்.
ராகுலன் 13 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் தனுசன், தினேஸ் காந் முறையே 14, 16 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்டுக்களையும் மற்றும் ரிசாந் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத் தாடிய யூனியன் கல்லூரி 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
கே.பிரசாந்தன் 22 ஓட்டங்களையும், தர்சன், தினேஸ் தலா 14 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
அச்சுதன் 14.1 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டமற்ற ஓவர்களுடன் 15 ஓட்டங்க ளுக்கு 6 விக்கெட்டுகளையும், தவநீதன் 15 ஓவர்கள் பந்து வீசி 3 ஓட்டமற்ற ஓவர் களுடன் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் டையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 39 ஓவர்களில் 4 விக் கெட்டுக்களை இழந்து 107 ஓட்டம் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.
விதுசன் 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண் டார். யூனியன் கல்லூரி சார்பில் இராகுலன் 2 மற்றும் தினேஸ்காந், தர்சன் தலா ஒரு விக் கெட்டையும் கைப்பற்றினார்கள்.
by Uthayan