News
செயற்ப்பாடுகளில் ஈடுபடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உள்ளதாக பலதரப்பாலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
Mar 12, 2008
தமது சொந்த கல்லூரியிலே இதர பாடவிதானச் செயற்ப்பாடுகளில் ஈடுபடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உள்ளதாக பலதரப்பாலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கல்லூரி உயர்பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ளதால் கல்லூரி நடைபெறும் நேரம் தவிர பிற நேரங்களில் அங்கு செல்லவோ பிறவேலைகளில் ஈடுபடவோ முடியாதளவுக்கு அங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் மேலதிக கல்வியையோ அல்லது விளையாட்டுப்பயிற்ச்சியையோ மேற்க்கொள்ள முடியாத சூழ்நிலை கானப்படுகின்றது.
குறிப்பாக விளையாட்டு அணி வீரர்கள் தங்கள் கல்லூரி மைதானத்தை பயன்படுத்தவோ மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்தவோ முடியாமல் உள்ளது. இது தொடர்பில் உரிய தரப்புக்களிடம் பல முறை முறையிட்டும் தகுந்த பலன் கிட்டவில்லை எனக்கூறப்படுகின்றது.அத்துடன் பழையமாணவர்கள் கல்லூரிக்கு செல்வது தொடர்பிலும் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையால் இக்கல்லூரியன் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் போன்ற பொதுக்கூட்டங்களை கூட வேறு இடங்களில் நடத்தவேன்டியுள்ளது.