News
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்துக்கான புதிய நிர்வாகத்துக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்லூரித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Feb 29, 2008
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்துக்கான புதிய நிர்வாகத்துக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்லூரித்தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான கூட்டம் இம்மாதம் 11ம் திகதி(11/02/2008) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதில் பழையமாணவர் சங்கத்துக்கான தலைவராக திரு பாலசிங்கம் அவர்களும் செயலாளராக திரு சுகிர் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் எதிர்கால கல்லூரிச்செயற்பாடுகள் தெடர்பாகவும் பல முக்கிய தீர்மாணங்களும் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நடந்துமுடிந்த கோட்டமட்ட வலைப்பந்தாட்ட போட்டிகளில் இக்கல்லூரியின் மூண்று அணிகளும் முதலாம் இடத்தை பெற்றுக்கொன்டுள்ளது.
செ.சிவசொரூபன்
பேராதனைப்பல்கலைக்கழகம்