News

கமலச்சந்திரன் கீர்த்தனா தெல்லிப்பழை யூனியன் கல்லூரி (மாவட்டம்1, தேசியமட்டம்105)
Jan 7, 2008


நேற்று யாழ்பாணத்தில், கல்வித் திணைக்களம் ஊடாக வெளியான ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாவட்ட மட்டத்தில் கணிதம் , உயிரியல் ஆகிய இரண்டு துறைகளிலும் முதலாவது இடத்தைப் பெற்றுள் ளது.
கலைத்துறையில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் வர்த்தக துறையில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடங்களையும் பெற்றுள்ளன.
ஜி.சி.ஈ(உயர்தரம்) பரீட்சையின் முடிவுகள் நேற்று யாழ்பாணத்தில் வெளியாகின. விமானம் மூலம் நேற்று பிற்பகல் எடுத்து வரப்பட்ட முடிவுகள் சகல வலயங்களுக்கும் உடன் அனுப்பப்பட்டன.
அவற்றை பாடசாலை அதிபர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். கல்வித்தி ணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று வெளியான முடிவுகளின் பிரகாரம் மாவட்டத்தின் முதலிடம், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களின் விவரங்கள் வருமாறு:
கணிதம்
* விமலநாதன் ரஜீவன்பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரி (மாவட்டம்1,தேசியமட்டம்3)
*இராமகிருஸ்ணன் ஜெயந்தன் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை.(மாவட்டம்2, தேசியமட்டம்5)
உயிரியல்
*ஸ்ரீசோதிநாதன் நிமலன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி (மாவட்டம்1,தேசியமட்டம்42)
*சசிகலா சிற்றம்பலம்வேம்படி மகளிர் கல்லூரி (மாவட்டம்2, தேசியமட்டம்49)
கலை
*கமலச்சந்திரன் கீர்த்தனா தெல்லிப்பழை யூனியன் கல்லூரி (மாவட்டம்1, தேசியமட்டம்105)
*நவநாதன் தாட்சாமினி சுண்டுக்குழி மகளிர் கல்லூரி (மாவட்டம்2,தேசியமட்டம்172)
*சரண்ஜா ஜோசப்குமார் யாழ்.இந்து மகளிர் கல்லூரி (மாவட்டம் 3,தேசியமட்டம்205)
வர்த்தகம்
*ரவிந்திரராஜா அனுசங்கர் சென்.ஜோன்ஸ் கல்லூரி (மாவட்டம்1, தேசியமட்டம்343)
*விஜயரத்தினம் ஹனிதாஅளவெட்டி அருணோதயா (மாவட்டம்2, தேசியமட்டம்556)
நேற்று கிடைத்த முடிவுகளில் யாழ்பாணம் இந்துக்கல்லூரியின் விவரங்கள் வரவில்லை என்றும் கொழும்பில் தங்கியுள்ள அக்கல்லூரி யின் அதிபர் ஏற்கனவே அதனைப் பெற்றுள்ளதா கவும் கல்லித் திணைக்கள வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.

Uthayan - Jaffna