News
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சாம்பியன்
Sep 24, 2007
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் என்பவற்றினால் யாழ் பாடசாலைகளுக்கு இடையேயான 15வயதுக்குட்டிட்டவர்களுக்கிடையே நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் கொழும்புத்துறை சென்.ஜோசப் கல்லூரியும் மோதிக்கொண்டன. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதி ஆட்டத்தின்போது யூனியன் கல்லூரி ஒரு கோலை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டம் முடிவடையும் வரை இரு அணிகளும் கோல்கள் பெற பெரு முயற்சி மேற்கொண்ட போதிலும் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை ஆட்ட முடிவில் யூனியன் கல்லூரி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென் ஜோசெப் கல்லூரியை வெற்றி கொண்டு யாழ் மாவட்ட சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த அணியினர் கொழும்பில் இடம்பெறும் தேசியமட்டத்திலான போட்டிகளில் இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.
Written by Pandaravanniyan