NEWS

Send your news to: news@junioncollege.com

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இம்மாதம் 14ம் திகதி இடம்பெறும்.
Feb 8, 2010

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இம்மாதம் 14ம் திகதி இடம்பெறும்.

யூனியன் கல்லூரி அபிவிருத்திக்கென ரூபா 20 மில்லியன் வழங்குவதாக பிரதி கல்வியமைச்சர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
Oct 30, 2009

பிரதி கல்வியமைச்சருக்கும் கல்லூரி அதிபருக்கும் இடையில் இம்மாதம் 28ம் திகதி இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே அமைச்சரால் மேற்கூறப்பட்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் அறிக்கை --- 2009
Oct 15, 2009

இன்று(15/10/2009) யூனியன் கல்லூரியில் நடைபெற்று முடிந்த வருடார்ந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரி அதிபர் திரு சு.புண்ணியசீலன் அவர்களாள் வெளியிடப்பட்ட அதிபர் அறிக்கையின் முழுவடிவமும் இங்கு தரப்படுகின்றது.

The annual prize day of J/Union College and the launching of the special magazine-2009
Oct 2, 2009

The annual prize day of J/Union College and the launching of the special magazine, will be held at a on the 15th of October 2009 at 1p.m.

தெல்லிப்பழை கோட்டமட்ட ஆங்கிலதினப்போட்டியில் யூனியன் கல்லூரிக்கு 15 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.
May 30, 2009

அண்மையில் வெளியிடப்பட்ட மேற்ப்படி போட்டி முடிவுகளின் அடிப்படையிலேயே யூனியன் கல்லூரிக்கு 15 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.

Obituary Notice(மரண அறிவித்தல்)
May 8, 2009

Mr. Sasikumar, who was a student in the 2004 Arts Batch, passed away in the Wanni.

The Historic Achievement of the Netball Teams of Union College
Apr 22, 2009

The under 15, 17 and 19 netball teams of J/ Union College have become champions in the divisional, zonal and district levels.(தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளே)

GCE O/L Exams: Union College Records 95% Pass Rate
Apr 22, 2009

Union College has obtained a pass rate of 95% in the GCE O/L Examinations for the year 2008. The results of the above exam were released in April 2009.(தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளே)

பிரதியதிபர் திரு சன்முகேஸ்வரன் அவர்கள் அதிபர் சேவை தரம் இரண்டுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Feb 9, 2009

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பிரதியதிபர் திரு சன்முகேஸ்வரன் இலங்கை ஆசியர் சேவை வகுப்பு ஒன்றில் இருந்து இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

The Annual inter house sports meet this month 14th
Feb 9, 2009

The Annual inter house sports meet of Union College will be held at 9.00am on the 14th of this month

Telephone Services to Begin at Union College Soon
Jan 18, 2009

The College administration has taken measures to restore telephone services at Union College after an intermission of some months.(தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளே)

இம்முறை கலைப்பிரிவில் மூன்று மாணவர்கள் அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப்பெற்றுள்ளனர்.
Jan 9, 2009

அண்மையில் வெளியிடப்பட்ட கடந்த ஆண்டுக்கான க.பொ.த(உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யூனியன் கல்லூரியின் மூன்று மாணவர்கள் கலைப்பிரிவில் அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப்பெற்றுள்ளனர்.

கணித பாடம் II மீள் பரீட்சை ஜனவரி 24ம் திகதி இடம்பெறும்.
Jan 9, 2009

நடந்து முடிந்த மேற்ப்படி பரீட்சை அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே இப்பரீட்சை எதிர்வரும் 24ம் திகதி இடம்பெறும்.

க.பொ.த உயர்தர பரீட்சை அனுமதி ஆங்கில பாட சித்தி கட்டாயமில்லை.-கல்வியமைச்சு
Jan 4, 2009

பாடசாலைகளில் கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு அனுமதி பெறுவதற்க்காக சாதாரண பரீட்சையில் ஆங்கிலப்பாடத்தில் சித்தியடைய வேன்டியது கட்டாயமில்லை என்று கல்வியமைச்சின் செயலாளர் நிமால் பண்டார தெரிவிக்கின்றார்.

யூனியன் கல்லூரியின் மாணவர் தேர்ச்சியறிக்கை வழங்கும் வைபவம் இம்மதம் 14ம் திகதி இடம்பெறும்.
Dec 7, 2008

இயற்க்கை அனர்த்தம் காரணமாக குறிப்பிட் திகதியில் பரீட்சைகள் நிறைவு பெறாத காரனத்தால் இம் முறை மாணவர் தேர்ச்சியறிக்கை வழங்கும் வைபவம் காலம் தாழ்த்தி இடம்பெறுகின்றது.

உப மகாண கனித விஞ்ஞானப் போட்டியில் யூனியன் கல்லூரிக்கு இரண்டு முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.
Dec 7, 2008

கடந்த மாதம் இடம்பெற்ற மேற்ப்படி போட்டிகளின் முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே யூனியன் கல்லூரிக்கு இரண்டு முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.

யூனியன் கல்லூரியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை(15/10/2008) இடம்பெறும்.
Oct 14, 2008

யாழ் தொல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை(15/10/2008) காலை 9 மனிக்கு ஆரம்பமாகும்.

கொழும்பு பழையமாணவர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டம் ஒவ்வொரு போயா தினங்களிலும் இடம்பெறும்-செயலாளர்.
Oct 10, 2008(கொழும்பு)

ஒவ்வொரு போயாதினங்களிலும் கொழும்பு பழையமாணவர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் நளாயினி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சாதனைகள் படைந்த யூனியன் கல்லூரியின் கிறிக்கெட் அணியினருக்கு உதவும்படி கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Sep 18, 2008(யாழ்ப்பாணம்)

மாவட்டமட்டத்தில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யூனியன் கல்லூரியின் 15 வயதுப்பிரிவு கிறிக்கெட் அணி மகாண மற்றும் தேசிய மட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்ப்படும் செலவீனத்தை ஈடுசெய்யவே இவ் உதவி கோரப்படுகின்றது.

15 வயது கிறிக்கெட் போட்டியில் யூனியன் கல்லூரி மாவட்ட சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Sep 18, 2008(யாழ்ப்பாணம்)

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையில் 15 வயதுப் பிரிவு கிறிக்கெட் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி திறமையாக விளையாடி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

யாழ் யூனியன் கல்லூரியின் வருடார்ந்த பரிசளிப்புவிழா ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறும்.
Sep 7, 2008

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறும்.

இவ்வாண்டு ஆங்கில தினப்போட்டிகளில் யூனியன் கல்லூரிக்கு கோட்டமட்டத்தில் 11 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.
Aug 9, 2008

நடந்து முடிந்த இவ்வாண்டுக்குரிய ஆங்கிலதினப்போட்டிகளின் முடிவுகள் தற்ப்பொளுது வெளியிடப்பட்டுள்ளன இதனடிப்படையிலேயே யூனியன் கல்லூரிக்கு கோட்டமட்டத்தில் 11 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.

இலவச பாடநூல் விநியோகத்தை சீராக்க விரைவில் புதிய செயற்றிட்டம்.
Aug 9, 2008

அரசாங்க பாடசாலைகளில் கற்க்கும் மாணவர்களுக்கான இலவச பாடநூல் விநியோகத்தில் ஏற்ப்படும் தாமதங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திசெய்ய இச்செயற்றிட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்.

Untitled document

மாணவர்களை நேசிப்பவரும் மாணவர்கள் மீது நம்பிக்கையுள்ளவருமான ஒருவரே எமது கல்லூரியின் அதிபர் என்று கூறுகின்றார் பழைய மாணவி யோ.காயத்திரி
Aug 6, 2008

கல்லூரி வரலாற்றில் மறக்கமுடியாத நேர்மையான மனிதரே அதிபர் திரு புண்னியசீலன் என மாணவி காயத்திரி அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சல் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் யூனியன் கல்லூரியில் ஆங்கிலப்பாடத்துக்கான ஆசிரியருக்கு பற்றாக்குறை.
Jul 28, 2008

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆங்கிலப்பாடத்துக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்லூரியின் பிரதியதிபர் சன்முகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உ/தரப் பரீட்சை இம்முறை இரு கட்டங்களாக நடைபெறும்.
Jul 28, 2008

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இவ்வருடத்துக்கான க.பொ.த உ/தரப்பரீட்சைகள் இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு மெய்வல்லுனர் போட்டிகளில் யூனியன் கல்லூரிக்கு கோட்டமட்டத்தில் 22 முதலாம் இடங்கள்.
Jul 17, 2008

நடந்து முடிந்த இவ்வாண்டுக்கான மெய்வல்லுனர் போட்டிகளின் முடிவுகள் கல்லூரியால் வெளியிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையிலேயே யூனியன் கல்லூரிக்கு கோட்டமட்டத்தில் 22 முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.

யாழ் யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான மதிய நேர சத்துணவுத் திட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து பல தரப்புகளாலும் கடும் விசனம் முன்வைக்கப்படுகின்றது.
Jul 6, 2008

உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் தேவைக்கதிகமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த்த மார்ச் 31ம் திகதி கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் பின்பே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரியின் அபிவிருத்தியிலும் மாணவர்களின் முன்னேற்றத்திலும் கடுமையாக உழைப்பவர் எமது அதிபர் என யூனியன் கல்லூரி மாணவர்கள் எம்மிடம் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Jul 6, 2008

நடைமுறை அதிபரும் பாடசாலை அபிவிருத்தியும் எனும் தொனிப்பொருளில் எமது இணையத்தளம் சார்பில் மாணவர்கள் சிலரிடம் கருத்துக் கேட்ட போதே மாணவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மாகாணமட்டம் தேசியமட்டம் போன்ற பலமட்டங்களில் பல வெற்றிகளைப்பெற்றுத்தந்த யாழ் யூனியன் கல்லூரியின் வலைப்பந்து அணியினரன் வெற்றிக்கு திறமை மிக்க பயிற்றுனர்களும் ஆசிரியர்களும் பங்காற்றியுள்ளனர்
Jun 19, 2008

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயமும் மோதிக் கொண்டன. இதில் யூனியன் கல்லூரி 3:0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீமுருகன் வித்தி யாலயத்தை வெற்றிகொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

Thangamma Appakkuddi passes away
Jun 15, 2008

Veteran religious and cultural personality of Eezham Tamils, Thangamma Appakkuddi, passed away on Sunday noon, at the age of 84, after bedridden for a few weeks in a stage of coma at the Jaffna Teaching Hospital. Apart from her religious leadership, Ms. Thangamma Appakkuddi, was a philanthropist and a social worker, caring for the much needed requirements of women and children in a war-torn society. She was an institution by herself. The funeral rites are scheduled to take place on Monday 2:00 p.m. at Kadduppeddi crematorium in her native village, Thellippazhai.

இவ்வாண்டு 20,203 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவர்
Jun 11, 2008(கொழும்பு)

2007 இல் நடைபெற்ற க.பொ.த (உ.தர) பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை வெட்டுப்பள்ளிகளை வெளியிட்டதை அடுத்து இவ்வாண்டு பல்கலைக்கழகங்களக்கு 20,203 மாணவர்கள் அனமதிக்கப்படுவர்.

க.பொ.த(உ/த) பரீட்சை நடத்துவதில் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Jun 8, 2008

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளை நடத்துவதற்க்கும் விடைத்தாள்களை திருத்துவதற்க்கும் தேவையான அளவு ஆசிரியர் விண்ணப்பிக்காமையால் பரீட்சையினை நடத்துவதில் நெருக்கடி நிலையினை எதிர்நோக்கியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரசிங்க தெரிவித்துள்ளார்.

மாவட்ட 19 வயதுப் பிரிவு வலைப்பந்தாட்டம் யூனியன் கல்லூரி வென்று மாவட்டச் சம்பியனானது
May 22, 2008

யாழ். மாவட்டப் பாடசாலை அணிக ளுக்கு இடையே இடம்பெற்ற 19 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றிபெற்று மாவட்ட சம்பியனா கத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதியதிபரின் கடும் முயற்ச்சியால் க.பொ.த (சா/தா) பரீட்சையில் யூனியன் கல்லூரி மாணவர்கள் சாதனை.
May 20, 2008

தனது கடுமையான முயற்ச்சியாலும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட முறையான பயிற்ச்சியாலும் இப்பரீட்சையின் கணிதப்பிரிவில் 100 சதவீத சித்தியை பெற முடிந்ததாக பிரதியதிபர் திரு சண்முகேஸ்வரன் எமக்கு வழங்கிய சிறப்புச்செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் சகல பல்கலைக்கழகங்களுக்கும் 19 ஆயிரத்து 652 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
May 20, 2008

நாட்டின் சகல பல்கலைக்கழகங்களுக்கும் இம்முறை புதிதாக 19652 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். 2007ஆம் ஆண்டின் உயர்தரப் பரீட்சைப்பெறுபேறுகளின் அடிப்படையில் இம் மாணவர்கள் இனைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1533 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் புதிய கணிப்பீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
May 15, 2008(கொழும்பு)

அக்கணிப்பீட்டின்படி 140 பாடசாலைகளில் ஒரு ஆசிரியர் மூலமும் 245 பாடசாலைகளில் இரு ஆசிரியர்களைக் கொண்டும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

க.பொ.த (சா/தர) பரீச்சையில் ஆகக் கூடியது 9 பாடங்கள் மட்டும
May 15, 2008(கொழும்பு)

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த (சா/தர) பரீச்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் ஆகக்கூடியது 9 பாடங்களுக்கே தோற்ற வேன்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் யூனியன் கல்லூரியின் அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து ஆசிரியர்கள் சுகயீனலீவுப்போராட்டம்.
May 13, 2008(யாழ்ப்பாணம்)

யாழ் யூனியன் கல்லூரியின் அதிபர் திரு புண்னிய சீலன் அவர்கள் உடுவில் கல்விக்கோட்டத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்தே ஆசிரியர்கள் இப்போராட்டத்தை நடத்துகின்றனர்.

ஒரு மாணவனின் படைப்பாற்றலை ஊக்குவிக்காமல் அதற்க்கு முட்டுக்கட்டைபோடும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கெடுபிடி உள்ளவர்கள்(Authoritarian) என்று கூறுகின்றார். முன்னாள் ஆசிரிய ஆலோசகர் திரு சிவராசா
May 13, 2008(யாழ்ப்பாணம்)

ஒரு மாணவனின் படைப்பாற்றலை சரிவர ஆராய்ந்து அவற்றில் உள்ள குறை நிறைகளை அறிந்து அவைபற்றி அம்மாணவனிடம் எடுத்துக்கூறி அவற்றை சிறப்பாக மீண்டும் வெளியிட ஊக்குவிப்பதே ஒரு சிறந்த ஆசிரியர் அல்லது சக மாணவனின் கடமையாகும்.என்று எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் திரு சிவராசா தெரிவித்துள்ளார்.

வலி கல்வி வலய பாடசாலை மெய்வல்லுநர் போட்டிகளில் தெல்லிப்பழை கல்விக்கோட்டம் முதலிடத்தைப்பெற்றுள்ளது.
May 7, 2008

வலிகாமம் கல்வி வலைய பாடசாலைகள் இடையே நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் தெல்லிப்பழை கல்விக்கோட்டம் 623 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மாணவர்களுக்கான அடையாள இலக்கத்தினை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
May 7, 2008

சகல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான மாணவர் அடையாள இலக்கத்தினை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவக்கை எடுத்துள்ளது.

எனது வெற்றி நோக்கிய பயனத்தில் என்றும் எனக்கு துனையாக இருப்பது யாழ் யூனியன் கல்லூரியே ஆகும். என்று கூறுகின்றார் கமலச்சந்திரன் கபீர்த்தனா.
May 1, 2008

சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப்பொதுத்தராதரப்பத்திர சதாரனதரப்பரீச்சையில் அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேட சித்திகளை(10A)பெற்ற இவரிடம் தங்களுடைய வெற்றிக்கு யூனியன் கல்லூரி எவ்வாறு உதவியது எனக்கேட்டபோதே அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.

கல்லூரி பல அசெகரியங்களை அன்றாடம் சந்தித்த போது ஏற்றம் தரும் ஏணிகளாய் இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும் பாடுபடுபவர்கள் கல்லூரியின் ஆசிரியர் குழுவினர்.
Apr 28, 2008

அர்ப்பணிப்புடன் தமக்கு விதிக்கப்பட்ட நேரத்ததை விட மேலதிக நேரத்தை செலவிட்டு தம் மாணாக்கருக்காகவும் கல்லூரியின் மதிப்பை உயர்த்தவும் இவர்கள் அரும் பாடு பட்டவர்கள் என்று யூனியன் கல்லூரியின் கடந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா மலரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(அதன் முழவடிவம் உள்ளே)

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் யாழ் யூனியன் கல்லூரியின் இரு அணிகள் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
Apr 27, 2008

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளுக்கான ஒளிப்பதிவு கடந்த மாதம் 15ம் திகதி(15.03.2008)யாழ்ப்பானம் வேம்படி மகளிர்கல்லூரியில் இடம் பெற்றது. அதனடிப்படையிலான முடிவுகளே தற்ப்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கான தவனை விடுமுறைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Apr 5, 2008

நடப்பு கல்வியாண்டின் முதலாம் தவனைக்குரிய தவனை விடுமுறைக்காலம் கல்வித்தினைக்கழகத்தால்
சகல பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மாணவர்களின் பரீட்சைப்பெறுபேறுகள் உள்ளே இனைக்கப்பட்டுள்ளன.
Apr 5, 2008

தற்ப்பொளுது வெளியாகியுள்ள சாதாரனதரப்பரீச்சை முடிவுகளின் படி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேலும் சில மாணவர்களின் விபரங்கள் இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது.

யூனியன் கல்லுரி மாணவி கமலச்சந்திரன் கவீர்தனா சாதாரனப்பரீட்சையில்அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேட புள்ளிகளைப்பெற்றுள்ளார்.
Apr 3, 2008

தற்ப்பொளுது இலங்கை பரீட்சை தினைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி இம் மாணவிக்கு அனைத்துப்பாடங்களிலும் தரச்சித்தி கிடைத்துள்ளது.

யூனியன் கல்லூரியின் பழையமாணவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் தேவைகளறிந்து கை கொடுத்து வருவதாக கல்லுரி அதிபர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Apr 2, 2008

எந்த ஒரு பிரஜையும் தனக்கு கல்வி தந்த தாயை மறந்துவிடுவதில்லை அந்தவகையில் எமது கல்லூரியின் பழையமாணவர்களும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.

மாணவர் தம் ஆளுமையை விருத்தி செய்ய பல மன்றுகள் கல்லூரியில் இயங்கி வருகின்றன.
Mar 30, 2008

மாணவர்களின் வளர்ச்சிக்கு தூண்களாக நிற்க்கும் இம் மன்றுகள் வருடாந்தம் தம் திறமைகளை வெளிப்படுத்தி கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகின்றன.

தனி நடிப்பு போடடியில் யாழ் யூனியன் கல்லூரி மாணவர்கள் வெற்றி
Mar 30, 2008

யாழ் கல்வியல் கல்லூரியால் நடத்தப்படும் தனி நடிப்பு போட்டியில் யாழ் யூனியன் கல்லூரி மாணவர்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதாக இக்கல்லூரியின் நாடகமும் அரங்கியலுக்கும் பொறுப்பான ஆசிரியர் திரு தவசோதிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யூனியன் கல்லூரி தொடர்பான குறுஞ்செய்திகள் உள்ளே
Mar 28, 2008

யாழ் யூனியன் கல்லூரி சம்பந்தமாக சில முக்கிய குறுகிய செய்திகள் உள்ளே இனைக்கப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதியுடன் ஓய்வுபெறுவதாக கல்லூரி அதிபர் அறிவித்துள்ளார்.
Mar 28, 2008

அதிபரின் பதவி விலகல் தொடர்பாக நீன்ட காலமாக இருந்துவந்த சந்தேகம் தொடர்பில் கேட்க்கப்பட்டபோதே அவர் இத்தகவல்களை தெரிவித்தார்.

சென்.ஜோன்ஸ் யூனியன் ஆட்டம் சமநிலையில் முடிந்தது இராகுலன் 73 ஓட்டங்களை விளாசினார்
Mar 20, 2008

யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவினர்களுக்கு இடையே இடம் பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப் பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டி சமநிலை யில் முடிவடைந்துள்ளது.

தெல்லிப்பழைக் கோட்ட வலைப்பந்தாட்டம்: 3 பிரிவுகளிலும் யூனியன் கல்லூரி வெற்றி
Mar 20, 2008

தெல்லிப்பழைக் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி 3 பிரிவுகளிலும் முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

செயற்ப்பாடுகளில் ஈடுபடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உள்ளதாக பலதரப்பாலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
Mar 12, 2008

தமது சொந்த கல்லூரியிலே இதர பாடவிதானச் செயற்ப்பாடுகளில் ஈடுபடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உள்ளதாக பலதரப்பாலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கல்லூரி உயர்பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ளதால் கல்லூரி நடைபெறும் நேரம் தவிர பிற நேரங்களில் அங்கு செல்லவோ பிறவேலைகளில் ஈடுபடவோ முடியாதளவுக்கு அங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் மேலதிக கல்வியையோ அல்லது விளையாட்டுப்பயிற்ச்சியையோ மேற்க்கொள்ள முடியாத சூழ்நிலை கானப்படுகின்றது.

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அமைந்துள்ள கிறிஸ்த்தவ தேவாலயம் நீன்ட காலமாக திருத்தப்படாமல் உள்ளது தொடர்பில் பல தரப்புக்களாலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mar 12, 2008

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அமைந்துள்ள கிறிஸ்த்தவ தேவாலயம் நீன்ட காலமாக திருத்தப்படாமல் உள்ளது தொடர்பில் பல தரப்புக்களாலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீன்ட கால தொண்மையை இக்கல்லூரி கொன்டது போலவே இத்தேவாயலமும் நீன்ட காலமாக உள்ளது இருந்தும் இது திருத்தப்படாமல் சிதைவடைந்த நிலையிலே இன்றும் கானப்படுகின்றது

யாழ் யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒவ்வொரு போயா தினங்களிலும் காலை 9மனிக்கு யாழ்ப்பானம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியில் இடம்பெறும் என பழையமாணவர் சங்க செயலாளர் திரு சுகிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Mar 9, 2008

யாழ் யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒவ்வொரு போயா தினங்களிலும் காலை 9மனிக்கு யாழ்ப்பானம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியில் இடம்பெறும் என பழையமாணவர் சங்க செயலாளர் திரு சுகிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தனது நிர்வாகப்பதவியை ஏற்றுக்கொன்ட திரு சுகிர் அவர்களிடம் புதிய நிர்வாகக்குழவின் செயற்பாடுகள் தொடர்பில் கேட்க்கப்பட்டபோதே அவர் பொதுக்கூட்டம் தொடர்பிலான இவ் விடையத்தை குறிப்பிட்டார்.

யாழ் யூனியன் கல்லூரியின் பழையமாணவர்களான பார்த்தீபன், சாய்ராம், செந்தூரன் மற்றும் அனுஷாஆகியோர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பொறியியல் துறைக்கான இளமாணிப்பட்டத்தைப்பெற்றுக்கொன்டுள்ளனர்.
Mar 8, 2008

யாழ் யூனியன் கல்லூரியின் பழையமாணவர்களான பார்த்தீபன், சாய்ராம், செந்தூரன் மற்றும் அனுஷாஆகியோர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பொறியியல் துறைக்கான
இளமாணிப்பட்டத்தைப்பெற்றுக்கொன்டுள்ளனர்.பேராதனைப்பபல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா இம்மாதம் 5ம்திகதி புதன்கிழமை துனைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது.

மாகாணமட்டம் தேசியமட்டம் போன்ற பலமட்டங்களில் பல வெற்றிகளைப்பெற்றுத்தந்த யாழ் யூனியன் கல்லூரியின் வலைப்பந்து அணியினரன் வெற்றிக்கு திறமை மிக்க பயிற்றுனர்களும் ஆசிரியர்களும் பங்காற்றியுள்ளனர்
Feb 29, 2008

மாகாணமட்டம் தேசியமட்டம் போன்ற பலமட்டங்களில் பல வெற்றிகளைப்பெற்றுத்தந்த யாழ் யூனியன் கல்லூரியின் வலைப்பந்து அணியினரன் வெற்றிக்கு திறமை மிக்க பயிற்றுனர்களும் ஆசிரியர்களுமான திருமதி ஜெ.ஜெயதரன் திரு இ.இராஜராஜன் செல்வி பி.பரமெஸ்வரன் திரு சோ.இராமநாதன் செல்வி பி.பத்மநதன் திரு ப.வாமநாதன் மற்றும் புஸ்பபராசா போண்றவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக கல்லூரித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
செ.சிவசொரூபன்
பேராதனைப்பல்கலைக்கழகம்

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்துக்கான புதிய நிர்வாகத்துக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்லூரித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Feb 29, 2008

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்துக்கான புதிய நிர்வாகத்துக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்லூரித்தகவல்கள்
தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூட்டம் இம்மாதம் 11ம் திகதி(11/02/2008) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

செ.சிவசொரூபன்
பேராதனைப்பல்கலைக்கழகம்

சிரமங்கள் மத்தியிலும் சிறப்பாக இயங்கிவரும் தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி சிறுபிள்ளைகளின் மகிழ்வான கல்விக்கு சிறுவர் பூங்காக்கள் அவசியமானவை
Feb 14, 2008

பிள்ளைகளைக் கூட்டிவந்து பாடசாலை யில் விடுவதும், பாடசாலை முடிந்த பின்னர் மீண்டும் அழைத்துச் செல்வதும் பெரும் சிரம மான பணியாக உள்ளது. அதற்கென நேரத்தை ஒதுக்கிச் செயற்பட வேண்டியுள்ளது. இதனால் ஏனைய வேலைகளைக் கவனிக்க முடியாமல் உள்ளது என்று கூறுகிறார் தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியில் தனது பிள்ளையைச் சேர்த்துள்ள பெற்றார் ஒருவர்.
இடம் பெயர்வுக்கு முன்னர் 900 இதற்கும் மேற்பட்ட பிள்ளைகள் இப் பாடசாலையில் கற்றனர். இன்று இப்பாடசாலையில் பிள்ளை களைச் சேர்ப்பதற்குப் பல பெற்றோர்கள் விரும்புகின்ற போதிலும் பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வது, மீள அழைத்து வருவது ஆகியவற்றில் காணப் படும் சிரமங்கள் காரணமாக வேறு பாட சாலைகளில் பிள்ளைகளை இணைத்துள் ளார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு மாணவர்களின் முன்னேற்றத்துக்கும் சாதனைக்கும் குறைவில்லை என்பதை கல்லூரி புள்ளிவிபரங்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன
Jan 16, 2008

உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள கல்லூரிக்கு செல்ல ஏராளமான பாதுகாப்பு கெடுபிடிகள் கல்விப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு பாதுகாப்பு
அச்சுறுத்தல் என ஏராளமான சிக்கல்களை இக்கல்லூரி மாணவர்கள் எதிர்கொன்டாலும் கடந்த ஆண்டு மாணவர்களின் முன்னேற்றத்துக்கும் சாதனைக்கும் குறைவில்லை என்பதை கல்லூரி புள்ளிவிபரங்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன
தேடலும் தகவலும்
செ.சிவசொரூபன்
பேராதனைப்பல்கலைக்கழகம்

கமலச்சந்திரன் கீர்த்தனா தெல்லிப்பழை யூனியன் கல்லூரி (மாவட்டம்1, தேசியமட்டம்105)
Jan 7, 2008

உயர்தரபரீட்சை முடிவுகள்: கணிதம், உயிரியல் துறைகளில் மாவட்டத்தில் ஹாட்லி முதலிடம் கலை யூனியன், வர்த்தகம் சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு

யாழ் யூனியன் கல்லூரியின் மாணவியான கமலச்சந்திரன்-கீர்த்தனா மாவட்ட நிலையில் முதலாம்
Jan 6, 2008

தற்பொளுது வெளியாகியுள்ள உயர்தரப்பரீச்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் யூனியன் கல்லூரியின் மாணவியான கமலச்சந்திரன்-கீர்த்தனா மாவட்ட நிலையில் முதலாம்
இடத்தை பெற்றுள்ளார். என கல்லூரித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிட மேலும் பல மாணவர்களும் சிறப்பான புள்ளிகளை பெற்றுள்ளனர் விபரம் கிடைத்ததும் அறியத்தரப்படும்.

By Soroopan

எம்.டி.தம்பிராஜாவுக்கு "அதி சிறந்த விளையாட்டு வீரன்' கௌரவம் வழங்கப்பட்டது
Nov 18, 2007

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட பயிற்சியாளர் சங்கத்தின் தலைவரும் விளையாட்டுத் துறையில் பல பதவிகளை வகித்த பிரபல முன்னாள் சகலதுறை விளையாட்டு வீரருமான எம்.டி. தம்பிராஜா அதிசிறந்த விளையாட்டு வீரன் (VERSATILE SPORTSMAN)) என்னும் பட்டத்தை யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை வழங்கிக் கௌரவித்துள்ளார்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சாம்பியன்
Sep 24, 2007

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் என்பவற்றினால் யாழ் பாடசாலைகளுக்கு இடையேயான 15வயதுக்குட்டிட்டவர்களுக்கிடையே நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு
Sep 17, 2007

வலி, வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கி வரும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் படையினரின் செயற்பாடு காரணமாக தினமும் காலதாமதமாக பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

வலி. வடக்கில் தொடரும் இராணுவத்தினரின் பதற்றம்
Thursday, August 23, 2007

பாலாலி படைத்தளத்தினுள் செல்கள் வீழ்ந்து வெடித்ததைத் தொடாந்து உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உடனடியாகக் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்

தேசிய மட்டப் போட்டிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பெண்கள் பிரிவு மேசைப்பந்தாட்டத்தில் பங்கு பற்றும்
Sep 12, 2007

தேசிய மட்டப் போட்டிக்கு 167 பேர் நாளை பயணம்

Welcome to J/Union College Tellippalai web page
Aug 14, 2007

Union college students can register your name on your school web site

New web page for Union College
Aug 11, 2007

New web page for Union College is coming soon. If you have any comments, please contact us by info@junioncollege.com. Also please send us if you have any more information/group picture to share with us.